பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியில் சர்பிரைஸாக மைனா நந்தினி போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவர் கலந்து கொள்வார் என முன்பிருந்தே பேச்சுகள் அடிபட்டது. இதனால், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? இல்லையா? என்ற கேள்வி இருந்தது. எப்போதும் சர்பிரைஸ் கொடுப்பதுபோல், இந்த வார ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வைல்டு கார்டு போட்டியாளராக என்டிரியாகியுள்ளார்.
மேலும் படிக்க | சிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்! அதுவும் இந்த இயக்குனரின் படத்திலா?
அவரை வரவேற்ற கமல்ஹாசன், சிறப்பு போட்டியாளர் எனக்கூறி வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். மைனா வீட்டிற்குள் சென்றதும் போட்டியாளர்கள் உற்சாகமடைந்தனர். மைனாவின் நீண்ட நாள் தோழியான ரக்சிதா அவரை பார்த்ததும் உற்சாகமடைந்து, கட்டியணைத்து வரவேற்றார். இப்போது, அவரும் ஒரு பிக்பாஸ் போட்டியாளராக வீட்டில் இருக்கும் நிலையில், மைனா நந்தினி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ரசிகர்கள் இதுவரை கொடுத்த ஆதரவுக்கு நன்றி, இப்போது கொடுக்கும் ஆதரவுபோல் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகும் எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏன் கடைசி நிமிடத்தில் மைனா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லை?
— (@FilmFoodTravel) October 17, 2022
அதற்கு காரணம் முதல் வார எவிக்சன் முடிந்து, ஒருவரை வெளியேற்றி அந்த வாரமே மைனாவை உள்ளே அழைத்து வருவார்களாம். pic.twitter.com/Ah5NVETLbd
ஐ லவ்யூ செல்லக்குட்டீஸ், நான் பிக்பாஸ் போறேன் என உற்சாகமாக அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தான் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. வீட்டிற்குள் சென்றதும் தன்னுடைய வழக்கமான காமெடி அரட்டையை தொடங்கியிருக்கிறார் மைனா. இந்தவாரம் அவருடைய பெயர் நாமினேஷன் லிஸ்டில் இருக்காது. அடுத்தவாரம் இவர் விளையாடுவதை பொறுத்து இடம்பெறலாம், இடம்பெறாமலும் போகலாம்.
மேலும் படிக்க | பிக்பாஸ் ஆட்டம் ஆரம்பம்! முதல் நாமினேஷனில் புகார்களை அடுக்கிய ஜிபி முத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ