Home> Movies
Advertisement

எஞ்சாயி எஞ்சாமி மெட்டு என்னுடையதுதான் - தெருக்குரல் அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் பதில்

எஞ்சாயி எஞ்சாமி பாடலில் தீ பாடிய வரிகளுக்கான பாடல் மெட்டை அவரே உருவாக்க; பிற வரிகளுக்கான மெட்டை நான் உருவாக்கினேன் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.  

எஞ்சாயி எஞ்சாமி மெட்டு என்னுடையதுதான் - தெருக்குரல் அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் பதில்

தெருக்குரல் அறிவின் வரிகளில் பாடகி தீ மற்றும் அறிவு ஆகியோர் குரலில் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் கடந்த ஆண்டு ‘எஞ்சாயி எஞ்சாமி’ என்ற சுயாதீன பாடல் வெளியானது. அந்தப் பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. குறிப்பாக பாடல் வரிகளை பலரும் பாராட்டி அறிவுக்கு தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இதனையடுத்து Rolling Stone India என்ற ஆங்கில தளத்தில் இப்பாடலை பாராட்டும் வகையில் பதிவொன்று போடப்பட்டது. ஆனால் அதில் தெருக்குரல் அறிவின் பெயர் இடம்பெறாதது அப்போதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில் கடந்த 28ஆம் தேதி செஸ்  ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இந்தப் பாடலை தீ மற்றும் மாரியம்மாள் இணைந்து பாடினர். அப்போதும் அறிவின் பெயர் இடம்பெறாதது மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. நிலைமை இப்படி இருக்க அறிவு இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பாடலை எழுதியது, பாடியது, கம்போஸ் செய்தது மற்றும் பெர்ஃபார்மன்ஸ் செய்தது என எல்லாமே செய்தது நான்தான்.  யாரும் எனக்கு இதற்கு இசையையோ, ஒரு பாடலை வரியையோ தரவில்லை.  இப்போது இந்த பாடல் பிரபலமாக இருப்பதற்கு கிட்டத்தட்ட 6 மாத காலங்கள் இரவு பகல் என பாராமல் கண் விழித்து தூங்காமல் உழைத்திருக்கிறேன்” என பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

fallbacks

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து பலரும் சந்தோஷ் நாராயணனுக்கும், தீக்கும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அளித்திருக்கும் விளக்கத்தில், “எஞ்சாயி எஞ்சாமி' பாடல் உடனான எனது பயணத்தைப் பற்றி கூற விரும்புகிறேன். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், நமது வரலாற்றையும் இயற்கையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடல் உருவாக்க வேண்டும் என்று தீ என்னிடம் கூறினார். இதனைத் தொடர்ந்து நான், தீ, அறிவு ஒருவர் மீது ஒருவர் வைத்த மதிப்புடன் இதில் இணைந்து பணியாற்றினோம்.

பாடலை தீயும், அறிவும் பாடினார்கள், பாடல் எப்படி அமைய வேண்டும் என்பதிலும் இருவரும் பங்கெடுத்தார்கள். இதில் தீ பாடிய வரிகளுக்கான பாடல் மெட்டை அவரே உருவாக்கினார். பிற வரிகளுக்கான மெட்டை நான் உருவாக்கினேன். அறிவு பாடிய வரிகளுக்கான மெட்டையும் நான் உருவாக்கி இருந்தேன்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arivu (@therukural)

இப்பாடலின் வரிகளுக்கு அறிவுடன் இணைந்து நிறைய நேரம் செலவிட்டேன். பாடலில் இடம்பெற்றிருந்த ஒப்பாரி வரிகளுக்கு அரக்கோணம் பகுதி சுற்று வட்டாரத்தில் தாத்தாக்களும், பாட்டிகளும் உதவினர். அவர்களின் பங்களிப்புக்கு மதிப்பளித்த அறிவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ’எஞ்சாயி எஞ்சாமி’ பாடலை ஒட்டு மொத்தமாக முடிக்க நாங்கள் 30 மணி நேரம் எடுத்துக் கொண்டோம். பாடல் பதிவு செய்யும்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். இப்பாடலின் மூலம் வந்த வருமானம் அனைத்தையும் நான், தீ, அறிவு சமமாகவே பங்கிட்டு கொண்டோம் என்பதை வெளிப்படையாகவே கூறுகிறேன்.

மேலும் படிக்க | செஸ் ஒலிம்பியாட்டில் சர்ச்சையான 'என்ஜாய் எஞ்சாமி'.. விளக்கம் அளித்த தெருக்குறள் அறிவு!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில், ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் நிகழ்வில் அமெரிக்கப் பயணம் காரணமாக அறிவு பங்கேற்க இயலாது என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் நாங்கள் தெரிவித்துவிட்டோம்.

நான் எப்போதும் அறிவை சிறந்த கலைஞர் என்றே உணர்கிறேன். நான் எப்போதும் எனது படைப்பு தளத்தை ஒடுக்கப்பட்டவர்களுக்காவே பயன்படுத்தி கொண்டிருக்கிறேன். இம்மண்ணின் கலைக்கும், கலைஞர்களுக்கும் என்னிடம் அன்பு மட்டுமே உள்ளது. ’எஞ்சாயி எஞ்சாமி' குறித்து இப்பாடலில் பங்கெடுத்த கலைஞர்கள், என்னிடம் தனிப்பட்ட முறையிலும், பொதுவெளியிலும் விவாதிக்க நான் தயாராகவே இருக்கிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | வாரிசு படப்பிடிப்புக்காக வரிசையில் சென்ற விஜய்யின் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More