காமெடி-காதல் நிறைந்த அமெரிக்க வெப் தொடர், மாடர்ன் லவ். உலகளவில் மிகவும் பிரபலமான இந்த தொடர் இந்தியில் மாடர்ன் லவ் மும்பை என்ற பெயரிலும் தெலுங்கு மொழியில் மாடர்ன் லவ் ஹைதராபாத் என்ற பெயரிலும் உருவாக்கப்பட்டது. இதையடுத்து, தமிழிலும் இத்தொடரை “மாடர்ன் லவ் சென்னை” என்ற பெயரில் அமேசான் ப்ரைம் நிறுவனம் வெளியிட உள்ளது. இதற்கான அறிவிப்பை அந்த நிறுவனம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
மாடர்ன் லவ் சென்னை:
ஏற்கனவே இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளிவந்த மாடர்ன் லவ் தொடர், மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. ஆந்தாலஜி தொடராக உருவாகியுள்ள இந்த சீரிஸில் 6 வித்தியாசமான காதல் கதைகளங்கள் அமைந்துள்ளன. இந்த தொடரில் மொத்தம் 6 கதைகள் இடம் பெறஉள்ளன. அதன்படி, இதை மொத்தம் 6 இயக்குநர்கள் இயக்கி உள்ளனர். இந்த தொடர், அமேசான் ப்ரைமில் மே 18 அன்று வெளியாகிறது.
ready to stumble upon love in the heart of Chennai?
— prime video IN (@PrimeVideoIN) May 8, 2023
#ModernLoveOnPrime, May 18@tylerdurdenand1 #BharathiRaja @ilaiyaraaja #BalajiSakthivel @Dir_Rajumurugan @Krishnakum25249 @AkshaySundher #Thiagarajankumararaja @gvprakash @RSeanRoldan @ashokselvan @riturv pic.twitter.com/OptKjTFdJY
இயக்குநர்களும் அவர்கள் இயக்கும் படங்களும்:
மேலும் படிக்க | விஜய்யா..விஜய்சேதுபதியா? ஷாருக் ட்வீட்டால் குழப்பம்!
3 ஆண்டுகளுக்கு பின்பு களமிறங்கும் சூப்பர் டீலக்ஸ் இயக்குநர்
சமந்தா, விஜய் சேதுபதி, மிஷ்கின், பகத் ஃபாசில் உள்பட பல நட்சத்திரங்களை வைத்து சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கியவர் தியாகராஜா குமாரராஜா. இவர், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நினைவோ ஒரு பறவை படம் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுக்கிறார். இதனால், ரசிகர்கள் இவரது படைப்பை பார்ப்பதற்கு பயங்கர ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
3 படங்களுக்கு இசையமைக்கும் இளையராஜா:
மொத்தம் 6 படங்கள் உள்ள ஆந்தாலஜி தொடரான மாடர்ன் லவ் வெப் தொடரில் 3 படங்களுக்கு இளையராஜாவே இசையமைக்கிறார். அது மட்டுமன்றி, பாரதிராஜா இயக்கும் ஒரு படத்திற்கும் அவருடன் கை கோர்க்கிறார்.
பல ஆண்டுகளுக்கு பின்பு கை கோர்க்கும் பாரதி ராஜா-இளையராஜா:
70களில் பலரையும் தங்களது படைப்பு திறமைகளால் கட்டிப்போட்ட வல்லவர்கள், பாரதி ராஜா-இளையராஜா. இவர்கள் கொரோனா ஊரடங்களிற்கு முன்பே ஒரு படத்தில் கை கோர்ப்பதாக இருந்தது. ஆனால், அது நடைபெறாமல் போனது. இந்த நிலையில், மாடர்ன் லவ் வெப் சீரிஸ் மூலம் இவர்கள் இருவரும் சுமார் 30 ஆண்டுகள் கழித்து ஒன்றாக பணிபுரிய உள்ளனர்.
மேலும் படிக்க | Iswarya Menon: ஜிகுஜிகு உடையில் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்த ஐஸ்வர்யா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ