Home> Movies
Advertisement

விஜயின் 'மெர்சல்' படத்தில் புதிய அப்டேட்

விஜயின் 'மெர்சல்' படத்தில் புதிய அப்டேட்

விஜய் 61வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படம் மெர்சல். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இப்படத்தில் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தில் இருந்து ஆளப்போறான் தமிழன் என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. 

இப்படத்தின் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'மெர்சல்' பாடல்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த மெர்சல் படக்குழு திட்டமிட்டுள்ளது. 

அதன்படி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருப்பதாகவும், அந்த நிகழ்ச்சி முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இசை வெளியீடு முழு நிகழ்ச்சியையும், படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய ஜி தமிழ் தொலைக்காட்சியிலும், யுடியூப்பிலும் நேரலையில் ஒளிப்பரப்ப படக்குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்து உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இசை வெளியீட்டு விழா அன்றே இப்படத்தின் டிரெய்லரும் வெளியாகும் என தெரிகிறது. 

Read More