Home> Movies
Advertisement

Kavin's LIFT: பிக்பாஸ் கவினின் LIFT படம் தொடர்பான வெளியான மாஸ் ட்வீட்

லிப்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Kavin's LIFT: பிக்பாஸ் கவினின் LIFT படம் தொடர்பான வெளியான மாஸ் ட்வீட்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கவின். இவர்’லிப்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்த படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்கி உள்ளார். 

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. லிப்ட் (Lift Movie) படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கொரோனா 2-வது (Corona Second Wave) அலை காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ALSO READ | கவினின் லிப்ட் திரைப்படம் ஓடிடி இல் வெளியீடா? படக்குழு விளக்கம்

இந்நிலையில் இப்படத்தின் விநியோகஸ்தர் தரப்பினரான லிப்ரா புரொடக்ஷன்ஸ் தங்கள் சமூக ஊடகத்தில் இப்படத்தை பற்றி அப்டேட் ஒன்றை தந்துள்ளனர். அதில், லிப்ட் திரைப்படம் சரியான சீட் எட்ஜ் ஹாரர் த்ரில்லர் மற்றும் கவின் (Actor Kavin) ரசிகர்களுக்கு ஒரு நல்ல முழு விருந்துக்கு மீண்டும் மகிழ்ச்சியாகவும் மிகவும் திருப்தியாகவும் இருக்கும். இது தியேட்டரில் காணத் தகுந்த திரைப்படம். இயக்குநர் வினீத் படத்தை செதுக்கியுள்ளார். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். விநியோகஸ்தராக என்னால் காத்திருக்க முடியவில்லை, என குறிப்பிட்டுள்ளார்.

 

 

முன்னதாக தொடர்களில் நடித்த கவின் பின்னர் நட்புன்னா என்னனு தெரியுமா படத்தில் நடித்து புகழ்பெற்றார். பின்னர் தளபதி65 பட பூஜையில் கலந்துகொண்டபோது ட்ரெண்ட் ஆனார். இதனை அடுத்து சிவாங்கி பாடிய அஸ்குமாரோ பாடலில் தேஜூ அஸ்வினியுடன் கவின் இணைந்து நடித்த தனி ஆல்பம் ஒன்று கவின் ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | கவின் நடித்துள்ள லிப்ட் படத்தில் சிவகார்த்திகேயன்! வெளியான முக்கிய வீடியோ!

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More