Home> Movies
Advertisement

கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் வெளியான மாஸ் போஸ்டர்

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு ’தசரா’ படக்குழுவினர் மாஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் வெளியான மாஸ் போஸ்டர்

கீர்த்தி சுரேஷ் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்த நிலையில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதன்படி இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டிற்குள் பறந்து சென்ற விஜய் டிவி பிரபலம்; முதல் வைல்டு கார்டு போட்டியாளர்

இதற்கிடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தசரா என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் நானி நடித்துள்ளார். மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார், அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு தசரா படக்குழுவினர் மாஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கீர்த்தி சுரேஷ் வெண்ணலா என்ற கேரக்டரில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே இந்த படம் கோதாவரிகானியில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் உணர்ச்சிகரமான கதை ஆகும். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | முடியாத நயன்தாரா விவகாரம் - அமைச்சர் என்ன சொல்கிறார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More