Home> Movies
Advertisement

இயக்குனராக அறிமுகமாகும் ஜோஜு ஜார்ஜ்! வெளியானது பர்ஸ்ட் லுக்!

Joju George: நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் உருமாகும் முதல் படமான 'பானி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

இயக்குனராக அறிமுகமாகும் ஜோஜு ஜார்ஜ்! வெளியானது பர்ஸ்ட் லுக்!

தனது அசாதாரண நடிப்பு மற்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் விருப்பமான நடிகராக இருந்து வந்த ஜோஜு ஜார்ஜ் தற்போது 'பானி' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது நடிப்பின் மூலம் இதுவரை பல ஹிட் படங்களை கொடுத்த ஜோஜு இயக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் 'பானி' படத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். 

மேலும் படிக்க | GOAT படத்தில் விஜய்க்கு டபுள் மடங்கு சம்பளம்.. அப்போ மற்ற நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஜோஜு ஜார்ஜ் எழுத்து மற்றும் இயக்கத்தில் இந்த படம் மாஸ், த்ரில்லர், ஆக்சன் வடிவில் தயாராகி வருகிறது. ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியாகும் படங்களுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் தற்போது அவரது இயக்கத்தில் உருவாகும் 'பானி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து அவரது இயக்கத்தில் வெளியாக போகும் படத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 100 நாள் பானி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஜோஜு ஜார்ஜ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து, அவரே இயக்கியும் உள்ளார்.

படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடிக்க அபிநயா நாயகி கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும் இப்படத்தில் முன்னாள் பிக்பாஸ் புகழ் சாகர், ஜுனைஸ் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. திரைத்துறைக்கு வந்து 28 வருடம் நடிகனாக இருந்த ஜோஜு ஜார்ஜ் தற்போது இயக்குனராக மாறி உள்ளார். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், துணை கதாபாத்திரம், முன்னணி நடிகர், ஹீரோ என ஜொலித்த ஜோஜு ஜார்ஜ் தற்போது இயக்குனராக மாறிய தனது கரியரில் புதிய சாதனைகளை படைக்க உள்ளார். 

கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா காம்போவில் உருவாக உள்ள படத்திலும் ஜோஜு ஜார்ஜ் நடிக்க உள்ளார். இந்த படத்தை தவிர அனுராக் காஷ்யப்பின் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் பான்-இந்திய நடிகராகவும் உயர்ந்துள்ளார். ஜோஜு ஜார்ஜின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ், ஏடி ஸ்டுடியோஸ் மற்றும் கோகுலம் மூவீஸ் ஆகியவற்றின் கீழ் எம் ரியாஸ் ஆடம் மற்றும் சிஜோ வட்கான் இந்த படத்தை தயாரிக்கின்றனர். விஷ்ணு விஜய் மற்றும் சாம் சிஎஸ் இசையமைக்க படத்தை டிரீம் பிக் பிலிம்ஸ் விநியோகம் செய்கிறது.

மேலும் படிக்க | அம்மாவுக்காக கோயில் கட்டினாரா விஜய்? அதுவும் இவ்வளவு பெருசாவா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More