Home> Movies
Advertisement

மாரிக்கு எதிராக தாரா போட்ட பிளான்‌! மாரி சீரியல் அப்டேட்!

Maari TV Serial:  கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் மாரியின் கர்ப்பத்தை கலைக்க பிளான் போட்டு எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்து தாரா டீம் காத்துக் கொண்டிருக்கிறது.  

மாரிக்கு எதிராக தாரா போட்ட பிளான்‌! மாரி சீரியல் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் மாரியின் கர்ப்பத்தை கலைக்க பிளான் போட்டு நவராத்திரி விழாவிற்கு ஏற்பாடு செய்து சூர்யாவுக்கு போன் செய்து தாரா மாரி அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வர சொன்ன நிலையில் இன்று எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்து தாரா டீம் காத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க | அனிருத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?

fallbacks

ரேடியம் கல்லை சங்கரபாண்டி பக்கத்தில் வைத்து டெமோ பார்க்க கொஞ்ச நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட இதே மாதிரி மாரிக்கும் வயிற்று வலி ஏற்படும் அவளை ஹாஸ்பிடல் கொண்டு போய் சேர்த்தா கர்ப்பம் கலங்கி போச்சுன்னு சொல்லுவாங்க என்று சொல்லி சந்தோஷப்படுகின்றனர். அதைத்தொடர்ந்து ஸ்ரீஜா அங்கு வர  தாரா நீ எல்லாம் இங்க வரக்கூடாது கர்ப்பத்தை கலைக்க நாங்க பிளான் போட்டுக்கிட்டு இருக்கோம் நீ நம்ப குடும்பத்தோட வாரிசு சம்பந்தப்பட்டிருக்க என சத்தம் போட்டு ஸ்ரீஜாவை அங்கிருந்து அனுப்பி வைக்கிறாள். 

அதன் பிறகு தாரா, ஸ்ரீஜா மற்றும் ஜாஸ்மின் என மூவரும் தங்க நகைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டு காத்திருக்க மாரி சிம்பிளாக வீட்டுக்கு வருவதை பார்த்து ஜாஸ்மின் ஒரு பொட்டு நகை இல்லாம வந்திருக்க என்று அவமானப்படுத்த முயற்சி செய்கிறாள். உடனே மாரி இதெல்லாம் பெருசு கிடையாது, அந்த அம்மனோட கழுத்துல இருக்க அந்த தாலிக்கு இணையா எதுவும் வராது என சொல்ல தாரா என்ன மாதிரி இப்படி எல்லாம் சொல்ற என பிரச்சனையை பெரிதாக்க பிளான் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பிக்பாஸ் பிரதீப் குறித்து போஸ்ட் போட்ட கவின்! என்ன சொன்னார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More