Home> Movies
Advertisement

இளசுகளின் இதயத்தை வென்ற லவ் டுடே...OTT தேதி வெளியீடு

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் 40 கோடிக்கு மேல் வசூல் செய்து தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை பெற்று கொடுத்தது. 

இளசுகளின் இதயத்தை வென்ற லவ் டுடே...OTT தேதி வெளியீடு

லவ் டுடே OTT ரிலீஸ்: கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தநார், மேலும் 2019ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு அப்போது நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பிரதீப் தானே ஹீரோவாக நடித்து ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் லவ் டுடே படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவானா மற்றும் ரவீனா ரவி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படம் ரிலீஸான முதல் நாள் முதலே இளசுகளின் மனதை வென்று பலத்த வரவேற்பைப் பெற்று வருகின்றது.

படத்தின் கதை என்ன?
இந்த படத்தில் ஹீரோ பிரதீப் மற்றும் ஹீரோயின் இவானா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டதாக நினைத்துக் கொண்டு உள்ளனர். இவர்களின் காதல் இவானவின் அப்பா சத்யராஜுக்கு தெரிய வருகிறது. அவர் இருவரையும் அழைத்து இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதாகவும், ஆனால் ஒரு நாள் மட்டும் இருவரும் தங்களது மொபைல்களை மாற்றிக் கொள்ளுமாறு சொல்கிறார். இதன் பின் என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதையாகும்.

மேலும் படிக்க | நடிகையுடன் வெளிநாட்டில் டேட்டிங்! செம ஹேப்பியில் நாக சைதன்யா - அப்செட்டில் சமந்தா

fallbacks

படத்தில் வசூல் நிலவரம்
4 கோடி பட்ஜெட்டில் எடுக்கபட்ட லவ் டுடே திரைப்படம் முதல் நாளில் இருந்தே வசூலை குவித்து வந்தது. இந்த திரைப்படம் வெளியாகி 20 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 55 லட்சம் வசூல் செய்திருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் கூறியுருந்தது. அதன்படி தற்போது வரை இந்த திரைப்படம் 40 கோடிக்கு மேல் வசூல் செய்து தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை பெற்று கொடுதட்டு வருகிறது.

fallbacks

OTT தளத்தில் எப்போது ரிலீஸ்?
இந்த நிலையில் இந்த திரைப்படம் OTT தளத்தில் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் தற்பொழுது OTT ரிலீஸ் குறித்த தகவலை பட குழு வெளியிட்டுள்ளது. அதன்படி லவ் டுடே திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி OTT இணையதளமான நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. இதனை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பேச்சிலர் பார்ட்டிக்காக கிரீஸ் பறந்த ஹன்சிகா! தோழிகளுடன் கும்மாளம் - வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More