Home> Movies
Advertisement

இழப்பதற்கு இனி எதுவும் இல்லை - காளி போஸ்டர் சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை அதிரடி

காளி பட போஸ்டர் தொடர்பாக சர்ச்சை வெடித்திருக்கும் சூழலில், இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என கவிஞர் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.  

இழப்பதற்கு இனி எதுவும் இல்லை - காளி போஸ்டர் சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை அதிரடி

தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப்படங்களுக்கு பல விருதுகள் கிடைத்தன. இவரின் பறை, தேவதைகள் உள்ளிட்ட பல ஆவணப்படங்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறை பற்றி இவர் இயக்கிய மாடத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளையும் வென்றது. கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் சாதிய ஒடுக்குமுறைகள், பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பல கவிதைகளை எழுதியுள்ளார்.

மேலும் படிக்க | சோழா டீ To சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஆதித்த கரிகாலன் - வைரலாகும் விக்ரம் புகைப்படம்

லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அந்தப் போஸ்டரில் காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் இடம்பெற்றிருந்தது. 

fallbacks

இந்தப் போஸ்டரை கண்ட சிலர் இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து இயக்குநரும், கவிஞருமான லீனா மணிமேகலை அளித்த விளக்கத்தில்,“ஒரு மாலைப்பொழுது, டொரோண்ட்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள்தான் படம். படத்தைப்பார்த்தா "arrest leena manimekalai" hashtag போடாமல் "love you leena manimekalai" என்ற ஹேஷ்டேக்தான் போடுவார்கள். 

 

எனக்கு இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை. இருக்கும்வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர்தான் என்றால் அதையும் தரலாம்" என குறிப்பிட்டிருக்கிறார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More