Home> Social
Advertisement

Video: புருவப்புயல் பிரியா வாரியருடன் போட்டி போடும் ரோஷன்!

ரோஷன் மற்றும் பிரியா வாரியரின் மற்றொரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Video: புருவப்புயல் பிரியா வாரியருடன் போட்டி போடும் ரோஷன்!

ரோஷன் மற்றும் பிரியா வாரியரின் மற்றொரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புருவத்தை சற்றே அசைத்து, உலக அளவில் ரசிகர் பலரை பெற்ற பிரியா வாரியர். மளையள திரையுலகில் விரைவில் வெளியாக இருக்கும் காதல் திரைப்படம் ‘ஒரு ஆடர் லவ்’. அந்த படத்தின் இடம் பெற்றுள்ள 'மாணிக்ய மலரே பூவி' பாடலில் புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்தவர்.

குறுகிய காலத்திலேயே பெரும் புகழை எட்டிவிட்டவர் இவர். தற்போது இவரின் பெயரை பயண்படுத்தினாலே பேஸ்புக்கில் லைக்ஸ் கொட்டி தள்ளுகிறது.

இந்நிலையில் இவர் தற்போது மீண்டும் தன் புருவத்தினை உயர்த்தி வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். ஆனால் இந்த முறை வீடியோவில் ரொமான்ஸ் இல்லை மாறாக போட்டி நிலவுகிறது. ஆம் ‘ஒரு ஆடர் லவ்’ படத்தின் நாயகன் ரோஷன் இவருக்கு போட்டியாக புருவத்தினை அசைக்க இருவரும் மாறி மாறி போட்டிப் போட்டு மீண்டும் ரசிகர்களை ஈர்த்துள்ளனர்.

 

Read More