Home> Movies
Advertisement

ரஜினி, கமல் இல்லை! முதல் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் இவர் தான்

Rajkiran Got 1 crore salary: தமிழ் சினிமாவில், முதல் முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய பிரபல நடிகர் இவரா? யார் அந்த நடிகர் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ரஜினி, கமல் இல்லை! முதல் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் இவர் தான்

என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் நடிகர் ராஜ்கிரண். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் என்று தான் கூற வேண்டும். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அரண்மனைக்கிளி திரைப்படத்தை தயாரித்து இயக்கி நடித்த ராஜ்கிரண் தொடர்ந்து எல்லாமே என் ராசாதான் திரைப்படத்தையும் இயக்கி நடித்தார்.

கதாநாயகனாக மட்டுமல்லாமல் மிக முக்கியமான கதாபாத்திரங்களையும் ஏற்று மிக சிறப்பாக நடிக்கும் ராஜ்கிரண் முரளியின் வீரத்தாலாட்டு, சூர்யாவின் நந்தா, சேரனின் பாண்டவர் பூமி&தவமாய் தவமிருந்து, சிலம்பரசனின் கோவில், அஜித் குமாரின் கிரீடம், லாரன்ஸின் முனி, தளபதி விஜயின் காவலன், தனுஷின் வேங்கை & பா.பாண்டி, சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், கார்த்தியின் கொம்பன் மற்றும் விருமன் உள்ளிட்ட பல படங்களில் மிரட்டலாக நடித்திருந்தார்.

இந்த வரிசையில் அடுத்தடுத்த படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்து வருகிறார். இதனிடையே ஆரம்ப காலத்தில் தொடர்ச்சியாக 3 மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் ராஜ்கிரண், அந்த சமயத்தில் ரஜினிகாந்த்தும் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். அந்த காலத்தில் ஹீரோக்களிலேயே அதிக சம்பளம் வாங்கியது ரஜினிகாந்த் தான். ஒரு படத்திற்கு சுமார் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வந்தார் நடிகர் ரஜினிகாந்த். அதேபோல் ரஜினிகாந்த்திற்கு இணையாக கமலும் அப்போது பல மடங்கு சம்பளத்தை பெற்று வந்தார் என்றே தான் கூற வேண்டும்.

மேலும் படிக்க | பஞ்சாயத்தில் பட்டய கிளப்பிய பரணி.. சௌந்தரபாண்டிக்கு வந்த ஆப்பு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

இந்நிலையில் பேட்டி ஒன்றில்,  ராஜ்கிரண் கூறுகையில் எனக்கு ஒரு கோடி சம்பளம் தருவதாக சொன்னது எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஏனெனில், நான் 16 வயசுல சென்னைக்கு வந்து முதன்முதலில் வாங்கிய சம்பளம் 4 ரூபாய் 50 பைசா ஆகும். அப்போது நான் தினக்கூலியாக இருந்தேன். இதையடுத்து என்னுடைய உழைப்பையும், நேர்மையையும் பார்த்து நான் வேலை பார்த்த கம்பெனியிலேயே கிளர்க்காக பதவி உயர்வு கொடுத்தாங்க. அப்போது மாதம் 150 ரூபாய் சம்பளம். பின்னர் அதை 170 ரூபாயாக உயர்த்தி கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதிலும் பல கிராமத்து கதைக்களத்தை தேர்வு செய்து ஹீரோவாக நடித்தார். தனித்துவமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த ராஜ்கிரண். ரஜினி - கமல் போன்ற நடிகர்கள் முன்னணி நடிகராக இருந்த காலத்தில், அவர்களே 50 முதல் 75 லட்சம் சம்பளமாக வாங்கியபோது, தான் நடித்த படத்திற்கு 1 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். அதன்படி கடந்த 1996 ல் கே.வி.பாண்டியன் இயக்கத்தில்,  'மாணிக்கம்' படத்துக்காக தான் முதன் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கினாராம். இதன் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ரூ.1 கோடி வாங்கிய நடிகராகவும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தயாராகிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2! ஹீரோ சிவகார்த்திகேயன் இல்லை-வேறு யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More