Home> Movies
Advertisement

GOAT 7வது நாள் வசூல் விவரம்! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?

The GOAT Movie Collection Day 7 : விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி கோட் படத்தின் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.  

GOAT 7வது நாள் வசூல் விவரம்! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?

The GOAT Movie Collection Day 7 : வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் தி கோட். இப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருவதை ஒட்டி, தமிழகத்தில் மட்டும் இதன் வசூல் எவ்வளவு என்பதை இங்கு பார்ப்போம். 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய், இன்னும் சில மாதங்களில் தனது கடைசி படத்தில் நடித்து முடித்த பிறகு திரையுலகை விட்டு மொத்தமாக விலக இருக்கிறார். அவரது கடைசி படத்திற்கு முந்தைய படமாக அமைந்திருக்கிறது, தி கோட் (The Greatest Of All Time) திரைப்படம். இந்த படம், தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூலித்திருக்கிறது தெரியுமா? 

தி கோட் படம்:

கோலிவுட்டில் இருக்கும் நடிகர்களிலேயே, ரஜினிக்கு அடுத்த டாப் எண்டர்டெயினராக விளங்கும் நடிகராக விளங்குபவர் விஜய். இவர் நடிப்பில் உருவான தி கோட் திரைப்படம், கடந்த 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய்யின் சினிமா பயணத்தின் இறுதி படங்களுள் ஒன்றாக இருப்பதால் இதன் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். அது மட்டுமன்றி, இப்படத்தின் டிரைலரும் சிறப்பாக இருந்ததால் இதன் மீதிருந்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. இறுதியில் படம அனைத்து விஜய் ரசிகர்களுக்கும் பெரிய ட்ரீட்டாக அமைந்தது. 

மேலும் படிக்க | தி காேட் பட இயக்குநர் வெங்கட் பிரபுவின் மனைவியா இது? வைரல் புகைப்படம்...

வசூல் வேட்டை:

தி கோட் படம், உலகம் முழுவதும் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்தியில் மட்டும் உரிமம் இல்லாததால் வெளியாகவில்லை. ஆனால், வட இந்தியவின் சில இடங்களில் மட்டும் தமிழில் வெளியானது. இந்த நிலையில், இப்படம் முதல் இரண்டு நாட்களிலேயே சுமார் ரூ.124 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. 5 நாட்களுக்குள்ளாகவே இந்த வசூல், சுமார் 300 காேடியை தொட்டது. இந்த நிலையில், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் தோல்வி அடைந்ததாக பலர் கூறினர். காரணம், படத்தில் அதிகமாக சி.எஸ்.கே ரெஃபரென்ஸ் இருந்ததாம். அது மட்டுமன்றி பல முன்னணி நடிகர்களின் படங்களின் ரெஃபரென்ஸும் இதில் இருந்தது. இது, வெளி மாநில ரசிகர்களுக்கு புரியவில்லை. இதனால்தான் அங்கு படம் சரியாக ஓடவில்லை என்று கூறப்படுகிறது. 

உலகளவு வசூல்..

தி கோட் படம் வெளியாகி, 7 நாட்கள் ஆகிறது. தற்போது வரை இப்படம் உலகளவில் ரூ.344 கோடியை தாண்டி வசூலை எட்டி வருவதாக கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டில் மட்டும்..

விஜய் நடிக்கும் படங்கள் சுமாராக இருந்தாலும், சூப்பராக இருந்தாலும் எப்படியாவது ஹிட் அடித்து விடும் என்பது அனைவருக்குமே தெரியும். காரணம், இவர்களுக்கு அந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதை தாண்டி, இவர் படம் குடும்ப ரசிகர்களுக்கும் அதிமாக பிடித்திருக்கிறது. இந்த நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் இப்போது வரை 134 கோடி வசூலிப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும், இப்படம் 7வது நாள் முடிவில் 11 கோடி வரை வசூலித்திருக்கிறதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | Leo vs GOAT எந்த படம் முதல் நாளில் அதிக வசூல் பெற்றது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More