Home> Movies
Advertisement

லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Sonakshi Sinha Marriage : பாலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்கும் சோனாக்ஷி சின்ஹாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Sonakshi Sinha Marriage : 

தமிழ் திரையுலக ரசிகர்களை பொருத்தவரை, தமிழ் மொழியை நடிகைகள் உட்பட பிறமொழி நடிகைகளுக்கு கூட வரவேற்பு கொடுப்பர். அப்படி, தமிழ்நாட்டிலும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சோனாக்ஷி சின்ஹா. இவரை அனைவரும் லிங்கா படத்தில் பார்த்திருப்போம். 

லிங்கா பட நாயகி: 

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த படம் லிங்கா. 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு பிறகு வெளியான இந்த படம் கொஞ்சம் சொதப்பிய திரைக்கதை காரணமாக தோல்வியை சந்தித்தது. படத்தில் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரை நட்சத்திரங்கள் இடம்பெற்றிருந்த போதிலும், பாக்ஸ் ஆபிஸில் தோற்கும் சோகம் இந்த படத்திற்கு நிகழ்ந்தது. இதில் ரஜினிகாந்த் தாத்தா-பேரன் என இரு வேடங்களில் நடித்திருந்தார். தாத்தா கதாபாத்திரமான லிங்கேஸ்வரனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடித்திருந்தார். பேரனுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். படம் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் ஹிட் அடித்தன. இந்த படத்தில் நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமான சோனாக்ஷி சின்ஹா அதன் பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. 

சோனாக்ஷி சின்ஹா:

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகரான சத்துரங்கன் சின்ஹாவின் மகள், சோனாக்ஷி சின்ஹா. தபங்க் படத்தில் அறிமுகமான இவர், அக்ஷய் குமார், சல்மான் கான், சைஃப் அலிக்கான், சாகித் கபூர் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு வளர்ந்து வரும் நடிகையாக இருந்த இவருக்கு தமிழில் லிங்கா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ஹிந்தி படங்களிலும் நடித்துக் கொண்டே வருகிறார். இவருக்கு தற்போது 37 வயதாகிறது. 

மேலும் படிக்க | ‘அந்த’ நடிகையுடன் ரொமான்ஸ் செய்ய பயந்த ரஜினி! காரணம் தெரியுமா?

விரைவில் திருமணம்: 

சோனாக்ஷி சில்ஹா, விரைவில் திருமணம் பந்தத்திற்குள் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் ஹிந்தி நடிகர் ஜாஹீர் இக்பாலை கடந்த சில வருடங்களாக டேட்டிங் செய்து வருவதாகவும், இவர்களுக்கு வெகு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரும் ஒரு வருடத்திற்கு முன்பிருந்து லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இவர்களின் திருமணம், சுற்றத்தார் சூழ வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

fallbacks

ரஜினிகாந்த் நண்பரின் மகள்: 

சோனாக்ஷி சின்ஹா, ரஜினிந்தின் நெடுங்கால நண்பரான ஷத்துரங்கன் சின்ஹாவின் மகள் ஆவார். லிங்கா படத்தில் நடித்த போது ரஜினிகாந்துடன் ஏற்பட்ட அனுபவத்தை அவர் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அப்போது தன்னுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ரஜினிகாந்த் தயங்கியதாகவும், தன் நண்பர் என்ன கூறுவாரோ என்று அவர் எண்ணியதாகவும் சோனாக்ஷி குறிப்பிட்டிருந்தார். சிறுவயதில் தன் மகள்களுடன் விளையாடிய பெண்ணுடன் இப்போது ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க வைப்பது கொடுமையாக இருந்ததாக அவர் கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் படிக்க | Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More