Home> Movies
Advertisement

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர்! பிரபல சீரியல் ஹீரோவாம்..யார் தெரியுமா?

Bigg Boss 8 Tamil First Contestant : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தொடங்க இருப்பதை அடுத்து, இதில் முதல் ஆளாக நுழையும் போட்டியாளர் குறித்த விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது.   

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர்! பிரபல சீரியல் ஹீரோவாம்..யார் தெரியுமா?

Bigg Boss 8 Tamil First Contestant : தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று, பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சி, தற்போது வேறு ஒரு தொகுப்பாளரின் கைக்கு மாற இருக்கிறது. 

பிக்பாஸ் சீசன் 8:

ஆங்கிலத்தில் பிக் பிரதர் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சியை, இந்தியாவில் பிக்பாஸ் என்று பெயர் மாற்றி ஒளிபரப்ப செய்தனர். இந்தியில் நடைப்பெற்று வரும் நிகழ்ச்சியை தற்போது சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில், 2017ஆம் ஆண்டு பிக்பாஸ் ஆரம்பிக்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் பெரிய ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து, பல சீசன்களை கடந்த கடைசியாக 7வது சீசன் முடிந்தது. இதில் போட்டியாளர்களாக வந்திறங்கிய மாயா, பூர்ணிமா, ரவீணா, விசித்ரா, அர்ச்சனா உள்ளிட்டோர் கவனம் ஈர்த்தனர். இறுதியில், வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா டைட்டிலை வெல்ல, மணிச்சந்திரா ரன்னர்-அப் பட்டத்தை வென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி, அக்டோபர் மாதத்தில் வழக்கமாக தொடங்கும். இந்த வருடமும் அதே மாதத்தில் தொடங்க நிகழ்ச்சி குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இதற்கான ஆடிஷனும் நடைப்பெற்று வருகிறதாம். இதில், முக்கிய போட்டியாளராக ஒரு சீரியல் நடிகர் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. 

யார் அவர்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்களே போட்டியாளர்களாக களமிறங்கினாலும், அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தின் மூலம் பிரபலமானவர்களாக இருப்பர். கண்டிப்பாக சமூக வலைதள பிரபலங்கள், துணை நடிகர்கள், சினிமாவை விட்டு அவுட் ஆன நடிகர்-நடிகைகள் என சிலர் இருப்பர். சீரியல் நடிகர்களும் இதில் முக்கிய இடத்தை பெற்றிருப்பர். அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனிலும் ஒரு சீரியல் நடிகர் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சரத்குமாரும் இல்லை..சிம்புவும் இல்லை..‘இவர்’தான் பிக்பாஸ் 8 தொகுப்பாளரா?

அந்த நடிகர் வேறு யாருமில்லை, பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோவாக நடித்து பிரபலமான அருண் பிரசாத்தான். இந்த தொடரில், பாரதியாக நடித்த இவருக்கு ரசிகைகள் பட்டாளம் ஏராளமாக இருந்தது. இவர், தற்போது பிக்பாஸ் போட்டியின் 8வது சீசனில் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் அவர் ஒரு ஸ்பெஷலான நபரின் ரெகமண்டெஷனில் நுழைந்திருக்கிறாராம். இது குறித்து திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும், இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

fallbacks

ரெகமெண்ட் செய்த நபர் யார்? 

பிக்பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னர் அர்ச்சனாவும் அருணும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை, அவர் ஏற்கவாே மறுக்கவோ இல்லை. இதையடுத்து, இவர்தான் பிக்பாஸ் சீசன் 8ல், அருணை போட்டியாளராக மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் இதற்கிணங்க, அவர் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதிய தொகுப்பாளர்..

பிக்பாஸ் நிகழ்ச்சியை இதுவரை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், இந்த சீசன் முதல் தான் விலகிக்காெள்வதாக சில வாரங்களுக்கு முன்பு அறிக்கையை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து வரவிருக்கும் புதிய தொகுப்பாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எழுந்திருக்கிறது. சரத்குமார், சிலம்பரசன், சூர்யா, விஜய் சேதுபதி என பல நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் இது குறித்த தகவலை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் குழுவே மிகவும் சீக்ரெட்டாக வைத்துள்ளது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 8 தொடங்குவது எப்போது? தொகுப்பாளர் யார்? போட்டியாளர்கள் யார்? விவரம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More