Home> Movies
Advertisement

தங்கலான் படத்தில் மாளவிகாவிற்கு பதில் நடிக்க இருந்தவர்! அட..‘இந்த’ அம்மனியா?

Thangalaan Movie Malavika Mohanan First Choice : தற்போது வெளியாகி இருக்கும் தங்கலான் படத்தில், மாளவிகா மோகனனுக்கு பதில் வேறு ஒரு நாயகி நடிக்க இருந்தார். அவர் யார் தெரியுமா? 
 

தங்கலான் படத்தில் மாளவிகாவிற்கு பதில் நடிக்க இருந்தவர்! அட..‘இந்த’ அம்மனியா?

Thangalaan Movie Malavika Mohanan First Choice : விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதில் மாளவிகா மோகனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

தங்கலான் திரைப்படம்:

பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், தங்கலான். கிட்டத்தட்ட 1 ஆண்டிற்கும் மேலாக நடைப்பெற்று வந்தது. தனித்துவமான கதைகளால் மக்கள் ஈர்த்து வரும் ரஞ்சித், இந்த முறை 19ஆம் நூற்றாண்டு கதையை தேர்ந்தெடுத்தார். தங்கலான் படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி திருவோது, பசுபதி, டேனியல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே.ஜி.எஃப் சுரங்கத்தை பற்றியும், அதை சுற்றி வாழ்ந்த பழங்குடியின மக்கள் பற்றியும்அந்த கே.ஜி.எஃப் சுரங்கத்தில் இருந்து தங்கம் எடுக்க வரும் பிரிட்டிஷ் அரசாங்கத்தினரை சுற்றியும் படத்தின் கதை சுழல்கிறது. இதில், இன்னொரு கதாப்பாத்திரமாக வருபவர், மாளவிகா மோகனன். 

முக்கிய கேரக்டரில் மாளவிகா மோகனன்..

தமிழ் படங்களில் நடிக்க வந்த மலையாள கதாநாயகிகளுள் ஒருவர், மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இதையடுத்து அவர் நடித்த பெரிய படம்தான், தங்கலான். இந்த படத்தில் அவர் ‘ஆரத்தி’ என்ற சூனியக்காரி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த கதாப்பாத்திரம் படத்தில் பெரிய அங்கமாக இருக்கிறது. வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பதற்காக இவர் உடல் எடையை குறைத்து, கச்சிதமாக வைத்து, கூடவே சண்டை மற்றும் சிலம்ப பயிற்சிகளையும் மேற்கொண்டார். இதற்கு ஏற்ற அவுட்புட் படத்திலும் கிடைத்தது. 

மேலும் படிக்க | தங்கலான் போன்ற படம் எடுக்க தைரியம் வேணும்... - நடிகர் விக்ரம்

fallbacks

நடிக்க இருந்த வேறு கதாநாயகி..

பொதுவாக, ஒரு படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க, முதலில் ஒரு நடிகைதான் தேர்ந்தெடுக்கப்படுவர். அப்படி, மாளவிகா மோகனனுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட நாயகி, ராஷ்மிகா மந்தனா. இவரிடம் தங்கலான் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்றதாகவும், அது ஓகே ஆகும் வரை சென்று பின்னர் அவர் நடிக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. 

தங்கலான் படம் எப்படி? 

தங்கலான் திரைப்படம், தற்போது வரை சுமாரான விமர்சனங்களை பெற்று வருகிறது. பா.இரஞ்சித் எப்போதும் போல இந்த படத்திலும் அரசியல் பேசியிருப்பதாகவும், இதையே அனைத்து படங்களிலும் செய்வதால் வெறுப்பு தட்டுவதாகவும் சில ரசிகர்கள் கூறியிருக்கின்றனர். ஒரு சிலர், படம் கொஞ்சம் மெதுவாக செல்வதால் பொறுமையை சோதிப்பதாகவும் கூறியிருக்கின்றனர். 

மேலும் படிக்க | தங்கமாக மின்னியதா ‘தங்கலான்’ திரைப்படம்? ட்விட்டர் விமர்சனம்..இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More