Home> Movies
Advertisement

கொரோனா குமார் படத்தில் இருந்து விலகிய சிம்பு! புதிய ஹீரோ இவரா..?

Corona Kumar Movie : சிம்பு நடிக்க இருந்த ‘கொரோனா குமார்’ படத்தில் ஒரு புதிய ஹீரோ நடக்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா?   

கொரோனா குமார் படத்தில் இருந்து விலகிய சிம்பு! புதிய ஹீரோ இவரா..?

Corona Kumar Movie : தமிழ் திரையுலகில் அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களுள் ஒருவர், சிம்பு. இவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த படங்களில் ஒன்று, கொரோனா குமார். இந்த படத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு கமிட் ஆகியிருந்த நிலையில், அவரால் அதில் நடிக்க முடியாமல் பாேனது. 

கொரோனா குமார்:

கொரோனா குமார் படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக, ஐசரி கணேஷ் தயாரித்தார். இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர், சிலம்பரசன். இந்த படத்தில் கமிட் ஆகி அட்வான்ஸ் எல்லாம் வாங்கிய நிலையில், படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், படத்தின் தயாரிப்பாளருக்கும் சிம்புவிற்கும் பெரிய தகராறு ஏற்பட்டது. அண்ணன்-தம்பி போல பழகி வந்த இருவரும் மீண்டும் முகத்தையே பார்க்க முடியாத அளவிற்கு சண்டையிட்டு பிரிந்தனர். இப்படத்தின் பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ‘குணா’ பட நாயகி ரோஷிணிக்கு என்ன ஆச்சு? முழு தகவல் இதோ..

புது ஹீரோ..

கொரோனா குமார் படத்தை இயக்குநர் கோகுல் டைரக்டு செய்ய இருக்கிறார். இவர் ஏற்கனவே இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரௌத்ரம், சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். கொரோனா குமார் படத்தில், சிம்புவிற்கு பதிலாக தற்போது வேறு ஒரு ஹீரோ நடிக்க இருக்கிறாராம். அவர் வேறு யாரும் இல்லை, சமீபத்தில் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த விஷ்ணு விஷால்தான். 

fallbacks

இவரை இப்படத்தில் நடிக்க வைக்க சில நாட்களாக பேச்சு வார்த்தை நடைப்பெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்க அவர் ஓகே சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. 

ஹீரோயின் இவரா? 

கொரோனா குமார் படத்தில் ஹீரோவாக நடிக்க விஷ்ணு விஷால் சம்மதித்து இருக்கும் நிலையில், நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர், 2022ஆம் ஆண்டு வெளியான ‘விருமன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | வரலக்‌ஷ்மியின் வருங்கால கணவர் யார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More