Home> Movies
Advertisement

Vikranth: விஜய்யின் மகன் எப்படிப்பட்டவர் தெரியுமா? மனம் திறந்த விக்ராந்த்!

Vikranth Talks About VIjay's Son: ‘லால் சலாம்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள விக்ராந்த், தான் பல பட வாய்ப்புகளை இழந்ததாக ஒரு பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார். 

Vikranth: விஜய்யின் மகன் எப்படிப்பட்டவர் தெரியுமா? மனம் திறந்த விக்ராந்த்!

Lal Salaam Actor Vikranth Talks About Vijay's Son Jason Sanjay: தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விக்ராந்த். இவர் இரண்டாவது ஹீரோவாக நடித்துள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் விரைவில் வெளியாகியுள்ளது. இதையடுத்து, விக்ராந்த் ஒரு நேர்காணலில் நடிகர் விஜய் குறித்தும், விஜய்யின் மகன் குறித்தும் தான் தவற விட்ட பட வாய்ப்புகள் குறித்தும் பேசியுள்ளார். 

விஜய் தம்பி விக்ராந்த்:

1991ஆம் ஆண்டு வெளியான ‘அழகன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்தவர், விக்ராந்த். இதையடுத்து, ‘கற்க கசடற’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பார்ப்பதற்கு விஜய் போலவே இருக்கும் இவர், ஒருவேளை விஜய்யின் தம்பியாக இருப்பாரோ என அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. பின்னர்தான் தெரிய வந்தது இவர் விஜய்யின் உறவினர் என்று. விஜய், இவருக்கு அண்ணன் ஆவார். 

தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இளைஞர்களை கவரும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விக்ராந்த், கடந்த சில வருடங்களாக இரண்டாவது கதாநாயகனாக நடித்து வருகிறார். 

குடும்ப கதை நாயகன்...

நடிகர் விக்ராந்த், கோரி பாளையம், எங்கள் அரசன், உள்பட சில வித்தியாசமான கதைகளில் ஹீரோவாக நடித்து வந்ததை அடுத்து, பின்னர் குடும்ப கதைகளிலும் கமர்ஷியல் படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். முத்துக்கு முத்தாக, தொண்டன், வெண்ணிலா கபடிக்குழு 2, பக்ரீத் என இவரது படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது. 

விஜய்யால் பட வாய்ப்புகள் இழப்பு..?

நடிகர் விக்ராந்த், சினிமாவில் நல்ல நல்ல பட வாய்ப்புகளை இழந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். தனக்கு பட வாய்ப்புகள் கொடுத்தவர்கள், ஆனால் அப்படத்தில் தனது அண்ணன் விஜய்யை கேமியோ ரோலில் நடிக்க சொல்லி அழைக்குமாறும், படத்தின் ப்ரமோஷன் விழாக்களுக்கு அழைக்குமாறும் பலர் கூறியிருக்கின்றனர். ஆனால், தான் அப்படி செய்ய மறுத்ததால் அந்த படங்களின் வாய்ப்பு கையை விட்டு நழுவி சென்று விட்டதாகவும் பேசியிருக்கிறார். 

“விஜய்யிடம் உதவி கேட்கவில்லை..”

நடிகர் விஜய், தனது அண்ணனாகவே இருந்தாலும் அவரிடம் தான் ஒரு போதும் உதவி கேட்டதில்லை என்று கூறியிருக்கிறார் விக்ராந்த். தான் கேட்பதற்கு முன்பாகவே பல விஷயங்களை தனக்காக விஜய் செய்து கொடுத்திருப்பதாகவும் விக்ராந்த் குறிப்பிட்டிருக்கிறார். 

மேலும் படிக்க | அதிர்ச்சி..! ‘கடைசி விவசாயி’ பட நடிகை கொலை! நடந்தது என்ன?

விஜய் மகன் குறித்து பேசிய விக்ராந்த்..

விஜய்க்கு ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில், ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வழங்க இருக்கிறது. விக்ராந்த் கலந்து கொண்ட நேர்காணலில் விஜய்யின் மகன் குறித்தும் அவர் கமிட் ஆகியுள்ள படம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த விக்ராந்த், அவர் மிகவும் மரியாதை தெரிந்த பையன் என்றும், அவருக்கு நல்ல எதிர்காலம் அமையும் என்று தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

லால் சலாம் திரைப்படம்:

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், லால் சலாம். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். விஷ்ணு விஷால்-விக்ராந்த் ஆகியோர் இரண்டு ஹீரோக்களாக நடித்திருக்கினறனர். படம், வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. 

மேலும் படிக்க | G.O.A.T: விஜய்யால் தமிழ் சினிமாவிற்கு எத்தனை கோடிகள் இழப்பா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More