சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் குஷி படத்தின் ட்ரெய்லர்: தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' குஷி' திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது சற்று முன் வெளியாகி இருக்கிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு 'ஹ்ரிதயம்' திரைப்படத்திற்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக், ஃப்ர்ஸ்ட் சிங்கிள் (என் ரோஜா நீயா) மற்றும் செகண்ட் சிங்கிள் (ஆராத்யா) பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது ரிலீஸ் செய்துள்ளது. அத்துடன் அத்துடன் இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் படக்குழுவினர் ட்வீட் செய்துள்ளனர்.
இதில் விஜய் தேவரகொண்டாவை ஏமாற்றுவதற்காக முதலில் முஸ்லிம் போல நடிக்கும் சமந்தா பின்னர் காதலித்ததும் தான் ஒரு பிராமின் வீட்டு பெண் என சொல்ல, இருவரது குடும்பத்தினரும் அவர்களுக்கு பொறுத்தமில்லை ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
பெற்றோரின் எதிர்ப்பால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளும் இருவரும் அதன் பின் கல்யாண வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகளையெல்லாம் சந்தித்தார்கள் என்பதை விவரிக்கும் விதமாக இந்த ட்ரெய்லர் அமைந்துள்ளது. எனவே ரொமாண்டிக் காமெடியாக உருவாகி இருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு வழக்கமான படங்களைத் தாண்டி புதிதாக ஏதாவது சொல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
A unison of two hearts and a collision of two worlds #KushiTrailer out now
— Mythri Movie Makers (@MythriOfficial) August 9, 2023
- https://t.co/jeb2xb0XAr#Kushi entertaining in cinemas from SEP 1st @TheDeverakonda @Samanthaprabhu2 @ShivaNirvana @HeshamAWMusic @saregamasouth pic.twitter.com/qLrWxpLkQ0
On SEPT 1st
— Vijay Deverakonda (@TheDeverakonda) August 9, 2023
We bring to the world
Full #Kushi https://t.co/gTnd1GJFMj#KushiTrailer pic.twitter.com/k6AzAT3i8e
'
இதனிடையே நடிகை சமந்தா நடிப்பில் தெலுங்கு திரையுலகில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘குஷி’. விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்து காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சிவா நிர்வாணா. மேலும் இப்படத்தில் ஜெயராம், சச்சின் கேதகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோகினி, சரண்யா பிரதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் முரளி ஜி ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஹேஷம் அப்துல் வஹாப். எனவே ரசிகர்களிடையே நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை கூட்டி வரும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது. அதுமட்டுமின்றி மேலும் அனைத்து மொழி ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பெற்றிருக்கும் குஷி திரைப்படம் இந்த ஆண்டின் வெற்றி படமாக அமைய அதிகபடியான வாய்புகள் உள்ளது என திரையுலகில் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ