Home> Movies
Advertisement

மீண்டும் வெளியாகிறது வீரப்பனின் டாக்குமெண்டரி! எந்த தளத்தில் தெரியுமா?

Koose Munisamy Veerappan Documentary: வீரப்பனின் வாழ்க்கை வரலாறு புதிய பரிமாணத்தில் புதிய ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.   

மீண்டும் வெளியாகிறது வீரப்பனின் டாக்குமெண்டரி! எந்த தளத்தில் தெரியுமா?

சந்தன மரக்கடத்தலுக்கு பெயர் போன வீரப்பனின் வாழ்க்கை வரலாறு, ஏற்கனவே நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், இன்னொரு புதிய கோணத்தில் வேறு ஒரு ஓடிடி தளத்தில் ஆவணப்படமாக (Documentary) இப்படம் மீண்டும் வெளியாக உள்ளது.

வீரப்பனின் வாழ்க்கை வரலாறு..

சந்தன மரங்களை கடத்தி பல வருடங்களுக்கும் மேலாக போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்தவர், வீரப்பன். இவரை பிடிக்க போலீஸார் பல தேடுதல் வேட்டைகளை மேற்கொண்டும் எதுவும் பயணளிக்காமல் போனது. இந்தியாவின் பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் இது குறித்த ஒரு  ஆவணப்படத்தை The Hunt for Veerappan என்ற பெயரில் வெளியிட்டது. இதற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர். இந்த படத்தில் வீரப்பனுடன் நெருக்கமாக பழகியவர்கள், வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் இறங்கிய காவல் துறை அதிகாரிகள் என பலரும் பேட்டி கொடுத்திருந்தனர். 

யார் இந்த வீரப்பன்? 

“இந்தியாவின் Robin Hood” என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டவர், வீரப்பன். சுமார் 30 வருடங்களாக சந்தன மரங்களை கடத்துதல், யாணைகளை வேட்டையாடுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். காவல் துறைய உள்பட கிட்டத்தட்ட 184 பேரை கொன்றவர் இவர். அதிலும் பாதி பேர் உயர்பதவிகளை சேர்ந்தவர்கள். மீதி பேர் வனத்துறை அதிகாரிகளாக இருந்தவர்கள். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என மூன்று மாநிலங்களிலும் சந்தன மரங்களை கடத்திய இவர் அம்மாநில காவல் துறையினரால் தேடப்பட்ட பெரும் குற்றவாளியாக இருந்தார். இவரை உள்ளூர் பயங்கரவாதி என அறிவித்தது அப்போதைய அரசாங்கம்.

மேலும் படிக்க | விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு அல்ல..’இந்த’ ஹீரோதான் நடிக்க இருந்தார்!

புதிய டாக்குமெண்டரி..

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 4ஆம் தேதி இந்த டாக்குமெண்டரி தொடர் வெளியானது. இதை செல்வமணி செல்வராஜ் என்பவர் இயக்கியிருந்தார். இதில் மொத்தம் நான்கு எபிசோடுகள் இருந்தன. இதில், வீரப்பனின் மனைவி, அவருக்கு நெருக்கமாக இருந்த சில தொழிலாளர்கள், தற்போது சிறையில் உள்ளவர்கள் என பலர் பேட்டி கொடுத்திருந்தனர். இந்த நிலையில், இதே போன்ற வீரப்பன் குறித்த புதிய டாக்குமெண்டரி தொடர் ஒன்று வெளியாக உள்ளது. 

ஜீ 5 டாக்குமெண்டரி..

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸின்  டிரெய்லரை சமீபத்தில் வெளியிட்டது. இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூஸ் முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை  வழங்க இருக்கிறது. நிஜ வாழ்க்கைக் காட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் வீரப்பனின் புதிரான ஆளுமை மற்றும் அவரது குற்ற பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது. இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில்,  அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. அது மட்டுமல்லாது அவரைச் சுற்றி நடந்த பல நிகழ்வுகள் பற்றிய அறியப்படாத உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஒரிஜினல் தமிழ் சீரிஸான ​​'கூச முனிசாமி வீரப்பன்' டிசம்பர் 8 முதல் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.  

பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கூறுகையில், “வீரப்பனுடனான  நேர்காணலைப் பெறுவதற்கு,  நாங்கள் பெரும் முயற்சிகளையும், பல இன்னல்களையும் இடர்களையும் சந்தித்தோம். முதல் முறையாக, இந்த நேர்காணலின் மிக விரிவான பதிப்பு ZEE5 OTT தளத்தில் பார்வையாளர்களுக்கு "கூச முனிசாமி வீரப்பன்" என்ற தலைப்பில் ஆவணக் கதையாக வழங்கப்படவுள்ளது. வீரப்பனின் கதை நேர்மையுடனும் முழுமையுடனும், பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை உள்ளடக்கியதாகச் சித்தரிக்கப்பட வேண்டியது அவசியம். இந்த சீரிஸ் வெறும் ஆவணப்படம் அல்ல; இது ஒரு ஈர்க்கக்கூடிய ஆக்‌ஷன் த்ரில்லராக மாறுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டதாகும்” என கூறினார். 

மேலும் படிக்க | மன்னிப்பா, மீண்டும் சர்ச்சையா? - 'சக திரைநாயகி திரிஷாவே' மன்சூர் பரபர அறிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More