Home> Movies
Advertisement

கொடிவீரன் டீசர் சாதனை 1.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது

கொடிவீரன் டீசர் சாதனை 1.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது

சசிகுமாரின் கொடிவீரன்  ட்விட்டரில் 1.7 மில்லியன்  பார்வையாளர்களை கடந்துள்ளது. 

இயக்குனர் சசிகுமார் நடிப்பில் இயக்குனர் எம்.முத்தையா எழுதி இயக்குத் தமிழ் குடும்ப நாடகம் திரைப்படம் "கொடிவீரன்". சசிகுமார், மகிமாநம்பியார் முன்னணி பாத்திரத்தில் நடிக்கின்றனர். சானுஷா, வித்ரத், பாலா சரவணன், பூர்ணா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். என். ஆர். ரகுநாந்தன் இசையமைக்கின்றார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30-ம் நாள் படத்தின் டீசர் மற்றும் செப்டம்பர் 18-ம் நாள் பாடல்களும் வெளியானது. தற்போது இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் இணையத்தில் சக்கைப் போடு போட்டு வருகின்றது. குறிப்பாக ட்விட்டரில் இப்படம் தொடர்ந்து ட்ரண்டில் இருந்தது. 

இந்நிலையில், 1.7 மில்லியன் நிலவரப்படி பார்வையாளர்களை பெற்றுள்ளது. முதல் முறையாக சசிகுமார் நடிப்பில் உருவாகும் ஒரு படம் கிட்டத்தட்ட 2 மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More