Home> Movies
Advertisement

KGF யாஷ் நடிக்கும் அடுத்த படம் இதுதான்! வெளியானது புதிய அப்டேட்!

தற்போது யாஷ் நடிக்கும் படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  

KGF யாஷ் நடிக்கும் அடுத்த படம் இதுதான்! வெளியானது புதிய அப்டேட்!

இந்தியாவில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் தான் அதிகம் வசூல் செய்த படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.  கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது, இதன் காரணமாக ரசிகர்கள் கேஜிஎஃப் நாயகன் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.  தனது அடுத்த படத்தின் அப்டேட்டை யாஷ் எப்போது வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது யாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.  இந்த பதிவை பார்க்கையில் அவர் தற்போது ஒரு படத்தின் வேளையில் ஈடுபட்டு இருப்பதாகவும், அடுத்த படம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

மேலும் படிக்க | 'இன்று அண்ணன், நாளை மன்னன்': போஸ்டர் ஒட்டி தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

அவர் எழுதுகையில், "ஆண்டு முழுவதும் உங்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி, குறிப்பாக எனது பிறந்தநாளில், என் இதயத்தை நன்றியுணர்வுடன் நிரப்புகிறது.  நான் எப்போதுமே எனது பிறந்தநாளில் பிறந்தநாள் நாயகனாக இருந்ததில்லை, ஆனால் பல ஆண்டுகளாக உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் ஒருவனாக இருந்துள்ளேன்.  நான் இந்த நாளில் பிறந்ததால் தான் உங்களை என்னால் சந்திக்க முடிந்தது, அதனால் இந்த நாளே சிறப்பாக ஆகியுள்ளது என்று கூறியுள்ளார்.  மேலும் கூறுகையில், நான் எனக்கு விருப்பமானவற்றில் நம்பிக்கையோடு வெற்றிபெற கடினமாக உழைக்கிறேன்.  நான் பெரிய அளவில் நினைக்கவும் மற்றும் சிறப்பாக இருக்கவும் எனக்கு மிகப்பெரிய சக்தியாக இருப்பது நீங்கள் தான். அடுத்ததாக நான் உங்களைச் சந்திக்கும் போது, ​​ஒரு சிறப்பான செய்தியையும், அதுபற்றிய  அனைத்து விவரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  அதைச் செய்ய, எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை, இதனை ஜனவரி 8 ஆம் தேதிக்குள் தெரிவிப்பது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. எனவே, இந்த ஆண்டு நான் உங்களிடம் இருந்து ஒரு சிறப்பான பரிசை எதிர்பாக்குறேன்,  அந்த பரிசு உங்களின் பொறுமை மற்றும் புரிதல் ஆகியவை தான்.

fallbacks

ஏற்கனவே வெளியான சில செய்திகளின்படி, நடிகர் யாஷ் ஜனவரி 8 ஆம் தேதி, அதாவது அவரது பிறந்தநாளில்  அடுத்தகட்ட படம் பற்றிய செய்திகளை அறிவிப்பார் என்று செய்திகள் வெளியானது.  தற்போது யாஷ் நடிக்கும் படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  யாஷ் நடிக்கும் இந்த படத்தை மஃப்டி படத்தின் தயாரிப்பாளர் நர்த்தன், இயக்குவார் என்று கூறப்படுகிரது,  இதுதவிர இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும்  படிக்க | அஜித்தை வைத்து ரிஸ்க் எடுக்க முடியாது - துணிவு இயக்குநர் ஓபன் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More