Home> Movies
Advertisement

கேரள நடிகர், தயாரிப்பாளர் சங்கங்கள் அதிரடி!! நடிகர் திலீப் நீக்கம்..

கேரள நடிகர், தயாரிப்பாளர் சங்கங்கள் அதிரடி!! நடிகர் திலீப் நீக்கம்..

நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் கேரள நடிகர் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இன்று கேரள நடிகர் சங்க அமைப்பான அம்மா சங்கம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் கைதான நடிகர் திலீப், நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து இவர் நீக்கபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவான மர்ம நபர்களால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இந்த வழக்கில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையில் பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர். 

இதனையடுத்து, அங்கமாலி கோர்ட் நீதிபதி இல்லத்தில் நடிகர் திலீப் உடனடியாக ஆஜர்படுத்தப்பட்டார். 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Read More