Home> Movies
Advertisement

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: தீபா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. உச்சகட்ட பதற்றத்தில் ரம்யா -

Karthigai Deepam Todays Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்தில் என்ன நடக்கும்?

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: தீபா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. உச்சகட்ட பதற்றத்தில் ரம்யா -

Karthigai Deepam TV Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்து தீபா குறித்து விசாரிக்க அவள் காரில் இருந்து வெளியே இறங்கி வந்து பேசிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து வாங்க பார்க்கலாம்.

அதாவது, ரம்யா கார்த்திக்கை சமாளித்து விட்டு மீண்டும் காருக்குள் சென்று ஏற தீபா என்னுடைய புருஷனா போன் பண்ணாரு என்று கேட்க ரம்யா இல்லை என்று சமாளிக்கிறாள். 

மறுபக்கம் கார்த்திக், இளையராஜா ஆகியோர் தீபாவை தேடி அலைய இளையராஜா தீபா வாய்ஸ் மெஸேஜ் செய்திருப்பதை கவனித்து கார்த்திக்கிடம் சொல்கிறான். 

உடனே கார்த்திக் அந்த வாய்ஸ் மெசேஜை கேட்கும் போது அபிராமிக்கு குணமாகவதற்காக பரிகாரம் செய்ய போவதாகவும் தனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அதுக்கு நான் தான் பொறுப்பு என்று பேசி இருப்பதை கேட்டதும் ஷாக் ஆகிறான். 

மேலும் படிக்க - நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட்: கடுப்பான மதுமிதா.. கையை அறுத்துக் கொண்ட மாயா..

இது தீபாவாக பேசுன மாதிரி தெரியல, யாரோ இப்படி பேச வச்சிருக்காங்க என்று சந்தேகப்படும் கார்த்திக் கூடிய சீக்கிரமா தீபாவை கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்லி தனது போலிஸ் நண்பருக்கு போன் செய்து வாய்ஸ் மெசேஜ் எந் டவரில் இருந்து வந்திருக்கு என்பதை கண்டுபிடிக்க சொல்கிறான். 

மறுபக்கம் தீபாவும் ரம்யாவும் பரிகாரம் செய்யும் இடத்திற்கு வந்திருக்க போலி சாமியார் தீபாவை மிதக்க விடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்து பூஜைகளை செய்கிறான். தீபா கார்த்திக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருப்பதால் பதற்றம் அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க - அஞ்சலி நடிப்பில் புதிய சீரிஸ் 'பஹிஷ்கரனா' .. வரும் 19 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமிங்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More