Home> Movies
Advertisement

கார்த்திகை தீபம் அப்டேட்: தீபாவை தேடும் கார்த்திக்கை திசை திருப்பிய ரம்யா.. அடுத்து நடக்க போவது என்ன?

Karthigai Deepam Today's Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

கார்த்திகை தீபம் அப்டேட்:  தீபாவை தேடும் கார்த்திக்கை திசை திருப்பிய ரம்யா.. அடுத்து நடக்க போவது என்ன?

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட் 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக், மாணிக்கம் என இருவரும் தீபாவை தேடி கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, கார்த்திக் கோவிலுக்கு வந்து தேட அங்கு அவனது நண்பன் இளையராஜாவை பார்க்க அவன் என்ன மாப்ள கோவிலுக்கு வந்திருக்க என்று கேட்க தீபா காணாமல் போன விஷயத்தை சொல்கிறான். பிறகு மூவரும் சேர்ந்து தேட தொடங்குகின்றனர். 

fallbacks

ரம்யாவுக்கு போன் செய்யும் கார்த்திக்

இதையடுத்து கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்து தீபாவை பார்த்தீங்களா என்று விசாரிக்க அவள் இல்லை என்று பொய் சொல்கிறாள், மேலும் ரியா ஏன் தீபாவை கடத்தி இருக்க கூடாது, அந்த கோணத்தில் விசாரித்து பாருங்க என்று சொல்லி போனை வைக்கிறாள். 

உடனே ரம்யா ஆனந்திற்கு போன் செய்து தீபாவை ரியா கடத்தி இருக்க வாய்ப்பிருக்கு, அவ வேற உங்களுக்கு போன் செய்து தீபாவை கடத்துவேனு சொல்லி இருக்கா என்று சொல்ல ஆனந்திற்கும் சந்தேகம் வருகிறது. 

ஐஸ்வர்யா வீட்டிற்கு செல்லும் ரம்யா

அதன் பிறகு ரம்யா  ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்து ராஜேஸ்வரியிடம் பேச்சு கொடுத்து அப்படியே ரூமிற்குள் உள்ளே சென்று ரியாவை தேட அவள் பாத்ரூமுக்குள் ஒளிந்து கொள்கிறாள். பாத்ரூமில் ஒளிந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரம்யா நெருங்கி செல்ல ரியா கரப்பான் பூச்சியை தூக்கி போட ரம்யா அதை பார்த்து பயந்து அங்கிருந்து நகர்ந்து வருகிறாள். 

மேலும் படிக்க | சர்பிரைஸ் விசிட் அடித்த எம்பி சுரேஷ்கோபி! ஆச்சர்யத்தில் படக்குழு! 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | என்னுடைய படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு மிரட்டல் - ரஞ்சித் பரபரப்பு புகார்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More