Home> Movies
Advertisement

நாளை முதல் கார்த்தி-ன் "தேவ்" திரைப்படம் திறையில்.. #DevFromFeb14

ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகி உள்ள "தேவ்" படம் நாளை வெளியாக உள்ளது.

நாளை முதல் கார்த்தி-ன்

"கடைக்குட்டி சிங்கம்" படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக விருக்கும் படம் "தேவ்'. படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் நிறைவு பெற்று நாளை உலக முழுவதும் திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. 

இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். கிரைம் த்ரில்லர் கலந்த காதல் படமான இதில் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரூபன் கவனித்துள்ளார். ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார்.

ஏற்கனவே படத்தின் ட்ரெயிலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நாளை படம் திரைக்கு வர இருக்குறது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் #DevFromFeb14 என்ற ஹேஷ்டேகே மூலம் "தேவ்" படம் குறித்து கார்த்திக் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read More