Home> Movies
Advertisement

பாகுபலி நடிகருக்கு வில்லனாக கமல்? 20 நாட்கள் கால்ஷீட்டிற்கு இத்தனை கோடி சம்பளமா..!

Kamal Haasan: நடிகர் கமல்ஹாசன், பிரபாஸ் நடித்து வரும் ப்ராஜக்ட் கே படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம், சயின்ஸ் பிக்ஷன் கதையாக உருவாகி வருகிறது. 

பாகுபலி நடிகருக்கு வில்லனாக கமல்? 20 நாட்கள் கால்ஷீட்டிற்கு இத்தனை கோடி சம்பளமா..!

தெலுங்கில் மெகா ஹிட் நடிகராக விளங்கும் நடிகர் பிரபாஸ், ப்ராஜக்ட் கே படத்தின் ஹீரோவாக நடிக்கிறார். சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் பாலிவுட் டோலிவுட் திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில்தான் கமல் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கமல் வில்லன்?

இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல், அடுத்து ப்ராஜக்ட் கே படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக கமலிடம் 20 நாட்கள் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சுமார் 150 கோடி சம்பளமாக பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பாகுபலி, சஹோ, சாலர், போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் நடித்த பிரபாஸ் தற்போது இன்னொரு மெகா பட்ஜெட் படமான ஆதி புருஷ் படத்தில் நடித்துள்ளார். இராமாயண கதையை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் க்ருத்தி சனோன், சயிஃப் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம், அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கமல்ஹாசன் ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்கவுள்ள தகவல் வெளியாகி ரசிகர்களை ஆனந்தப்படுத்தியுள்ளது

மேலும் படிக்க | திரை விருந்துக்கு தயாரா மக்களே? இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் & தொடர்களின் லிஸ்ட்!

நடிகர்கள் யார் யார்? 

பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும இந்த படத்தில் பல திரையுலக நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். முக்கியமாக, இந்த படத்தின் மூலம் நடிகை தீபிகா படுகோன் தெலுங்கு திரையுலகிற்குள் எண்ட்ரி கொடுக்கிறார். அமிதாப் பச்சன் மற்றும் திஷா பதானி ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்கின்றனர். இப்போது நடிகர் கமல்ஹாசனும் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் தகவல் உறுதியாகிவிட்டால், மூன்று திரையுலகை சேர்ந்த முக்கிய நடிகர்கள் நடிக்கும் படமாக ப்ராஜெக்ட் கே மாறிவிடும். 

fallbacks

இயக்குநர்:

நடிகையர் திலகம் (மஹாநதி), பித்த காதலு, எவுடே சுப்ரமணியம் போன்ற படங்களை இயக்கி வெற்றி இயக்குநர்களின் லிஸ்டில் இடம் பெற்ற நாக் அஷ்வின் ப்ராஜெக் கே படத்தினை இயக்கி வருகிறார். 

படப்பிடிப்பு நிறுத்தம்..

சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி விட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக பட வேலைகள் தடை பட்டுவிட்டன. கடந்த 2021ஆம் ஆண்டு படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கின. 

இசையமைப்பாளர் யார் தெரியுமா? 

தசரா படம் மூலம் டோலிவுட்டிற்குள் நுழைந்த சந்தோஷ் நாராயணன் ப்ராஜெக்ட் கே படத்திற்கு இசையமைத்துள்ளார். 

பெரும் பொருட் செலவில் படவிழக்கள்..

விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் ப்ராஜெக்ட் கே படப்பிடிப்பில் படக்குழுவினர் அனைவரும் பிசியாக உள்ளனர். இந்த படத்தின் விஎஃப் எக்ஸ் பணிகளும் கிராஃபிக்ஸ் காட்சிகளை உறுவாக்கும் பணிகளும் நடைப்பெற்று வருகின்றன. வைஜெயந்தி மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனம், இந்த படத்தினை தயாரிக்கிறது. அந்த நிறுவனத்தின் 50ஆம் ஆண்டு விழா வருவதையொட்டி, ப்ராஜெக்ட் கே படத்தினை பெரிய அளவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக பெரும் பொருட் செலவில் படவிழாக்களை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ரிலீஸ் எப்போது? 

ப்ராஜெக்ட் கே படம், பொங்கல் திருநாளை முன்னிட்டு அடுத்த வருடம் ஜனவரி 12 ஆம் தேதி படம் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தினை 2 பாகமாக எடுப்பதாக கூட சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்திய அளவில் இதுவரை வெளியான சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளுக்கு சவால் விடும் வகையில் இந்த படம் அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Navya Nair: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகை..ஐயய்யோ இந்த பிரச்சனையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More