Home> Movies
Advertisement

Kallakurichi Death : “மதுபான கடைகளை குறைக்க வேண்டும்” நடிகர் விஷாலின் வைரல் பதிவு!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 35ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, நடிகர் விஷால் இதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் குறியிருப்பது என்ன? இங்கு பார்ப்போம். 

Kallakurichi Death : “மதுபான கடைகளை குறைக்க வேண்டும்” நடிகர் விஷாலின் வைரல் பதிவு!

Kallakurichi Illicit Liquor Deaths Latest News: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 35ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, நடிகர் விஷால் இதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் குறியிருப்பது என்ன? இங்கு பார்ப்போம். 

விஷச்சாராய பலி:

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 37 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணமும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து அறிக்கை சமர்ப்பிக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். 

வலுக்கும் கண்டனங்கள்:

கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்பட, திரை பிரபலங்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளும் திமுக அரசை எதிர்த்து கண்டனங்களை எழுப்பி வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஷாலும் இது குறித்த ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

விஷாலின் முழு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளவை:

“கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில்  விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும் போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது.

சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: ரூ. 10 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

"கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்." 

என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களின் ஒருவனாக தமிழ்நாடு அரசிற்கு சமர்பிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். 

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு : முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More