Home> Movies
Advertisement

'கல்கி 2898 கிபி' பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டிய, காந்தாரா புகழ் ரிஷப்ஷெட்டி

Kalki 2898 AD : காந்தாரா பட நடிகரான ரிஷப் ஷெட்டி, 'கல்கி 2898 கிபி'  பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

'கல்கி 2898 கிபி'  பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டிய, காந்தாரா புகழ் ரிஷப்ஷெட்டி

Kalki 2898 AD : காந்தாரா பட நடிகரான ரிஷப் ஷெட்டி, 'கல்கி 2898 கிபி'  பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

கல்கி 2898 ஏடி திரைப்படம்:
ரசிகர்களால், ‘ரிபள் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்த இவர், அதன் பிறகு தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தொடர்ந்து நடித்து வரும் இவர், கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டிலும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம், கல்கி 2898 ஏடி (Kalki 2898 AD) ஆகும். இந்த படத்தை, தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்குகிறார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் கல்கி 2898 ஏடி படத்தை மிகவும் பிரம்மாண்டமான அளவில் தயாரித்துள்ளது. இந்தப் படம், பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இதில் பிரபாஸ் உடன் தீபிகா படுகோன், கமல் ஹாசன், அமிதாப்பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். மேலும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருக்கிறார்.

மேலும் படிக்க | Varalaxmi Sarathkumar Fiance Nicholai Sachdev Net Worth : வரலட்சுமியின் வருங்கால கணவருக்கு இவ்வளவு சொத்துகளா? சமூகம் பெரிய இடம் போல..!

கல்கியும் காந்தாராவும் ஒன்றிணைந்த தருணம்:
இந்நிலையில் 'கல்கி 2898 கிபி'  படமும் “காந்தாரா” படமும்  இணைந்த ஒரு மகிழ்வான தருணம். காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி  'கல்கி 2898 AD'  படத்தில் பயன்படுத்தப்பட்ட, எதிர்கால வாகனமான புஜ்ஜியை ஓட்டியது, இப்போது இணையம் முழுதும் பெரும் வைரலாகி வருகிறது.  'கல்கி 2898 கிபி'  x “காந்தாரா” எனும் டேக்குடன் புஜ்ஜியை தான் ஓட்டும் வீடியோவை ரிஷப் ஷெட்டி டிவிட்டரில் பகிர, ரசிகர்கள் அதனைக் கொண்டாடி பகிர்ந்து வருகின்றனர். 

புஜ்ஜியை ரிஷப் ஷெட்டி ஓட்டும் வீடியோ கல்கி படத்தின் எதிரர்பார்ப்பைக் கூட்டுகிறது. ரசிகர்கள் மத்தியில் கல்கி திரைப்படம் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.  முன்னதாக, ஆனந்த் மஹிந்திராவும் புஜ்ஜியை ஓட்டியது வாகனத்தின் வசீகரத்தை அதிகப்படுத்தியது.

'கல்கி 2898 கிபி' படத்தின் முன்னணி நடிகரான பிரபாஸுக்கு ரிஷப் ஷெட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, பிரபாஸின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார். மேலும் ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ரசிக்குமாறும் அவர் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள, கல்கி 2898 கிபி திரைப்படத்தில்,  அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகிய நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர், இப்படம் ஜூன் 27, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க | Indian 2: இந்தியன் 2 டிரைலர் வெளியீட்டு விழா! கமல் குறித்து ஷங்கர் பகிர்ந்த விஷயம்-என்ன தெரியுமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More