Home> Movies
Advertisement

தனுஷின் 50வது படத்தில் இணைந்த காளிதாஸ் ஜெயராம்.. ஷூட்டிங் ஆரம்பம்

Dhanush D50 Update: தனுஷின் முந்தைய படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே, கலை இயக்குனர் ஜாக்கி என்கிற ஜாக்சன், பப்ளிசிட்டி டிசைனர் கபிலன் செல்லையா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் காவியா ஸ்ரீ ராம் ஆகியோர் D50 திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர்.

தனுஷின் 50வது படத்தில் இணைந்த காளிதாஸ் ஜெயராம்.. ஷூட்டிங் ஆரம்பம்

இயக்குனர் தனுஷ் டி50 படத்தின் முக்கிய அப்டேட் இதோ: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள  நடிகர் தனுஷ் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் மூலம் ரசிகர்களை குஷி படுத்தி உள்ளார். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதன் பிறகு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைய உள்ளார் நடிகர் தனுஷ். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் பூஜை கடந்த ஆண்டு நவம்பர் 28 அன்று ஹைதராபாத்தில் தொடங்கியது.

இதற்கிடையில் தற்போது நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குகிறார். இதற்கு தற்காலிகமாக 'D 50' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியானது. அத்துடன் இந்த படத்தில் விஷ்ணு விஷாலை தவிர எஸ்.ஜே. சூர்யா போன்ற பல திரைப்பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தனுஷின் முந்தைய படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே, கலை இயக்குனர் ஜாக்கி என்கிற ஜாக்சன், பப்ளிசிட்டி டிசைனர் கபிலன் செல்லையா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் காவியா ஸ்ரீ ராம் ஆகியோர் D50 திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர். மேலும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த படம், கேங்க்ஸ்டர் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, இந்த படத்தில் உச்ச நடிகர் ஒருவரும் படத்தில் இருக்கிறாராம். 

மேலும் படிக்க | ‘கே.ஜி.எஃப்’ யூனிவர்ஸை உருவாக்கும் கன்னட இயக்குநர்..? ‘சலார்’ படத்தின் பின்னணி என்ன..?

இந்த நிலையில் தற்போது ஜூலை 5 மாலை D50 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸில் “புதிய ஆரம்பம்” என குறிப்பிட்டு, புதுப்பேட்டை படத்தின் "வரியா" பாடலை பதிவிட்டிருப்பதால் நடிகர் தனுஷ் உடன் D50 படத்தின் காளிதாஸ் ஜெயராம் இணைந்திருப்பதாக தற்போது செய்திகள் பரவி வருகின்றன. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

fallbacks

முன்னதாக கடந்த ஜூலை 3 ஆம் தேதி நடிகர் தனுஷ் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்து மொட்டைத்துக் கொண்டார்.  மேலும் இந்த லுக், அவருடைய 50ஆவது படத்திற்கான லுக் ஆக இருக்குமோ என ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். ஒரு சில ரசிகர்கள், எல்லோரையும் போல தனுஷும் தனது மகன்களுடன் சென்று, திருப்பதி பெருமாளுக்கு நேர்த்திக்கடனாக முடியை காணிக்கையாக செலுத்தியிருப்பார் எனவும் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

fallbacks

மேலும் படிக்க | கசிந்த KH 233 கதை: இப்படித்தான் இருக்க போகுதாம் கமல் எச்.வினோத் படம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More