Home> Movies
Advertisement

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல் எப்போ ரிலீஸ்? வெளியான மாஸ் அறிவிப்பு

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல் எப்போ ரிலீஸ்? வெளியான மாஸ் அறிவிப்பு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

காத்துவாக்குல ரெண்டு காதல் (Kaathu Vaakula Rendu Kaadhal) படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இதற்கிடையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் முதல் பாடல், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ALSO READ | மனைவியாகும் நயன்தாரா.. ஆனால் கணவர் விக்னேஷ் சிவன் இல்லை.

இந்நிலையில், இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அப்டேட்டை படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் படி வரும் செப்டம்பர் 18-ம் தேதி ‘டூ.. டூ.. டூ’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். 

 

 

முன்னதாக இந்த பாடலின் மியூசிக் வீடியோ ஷூட்டிங் நடைபெறுவதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இருந்தார்,

2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி படத்தை இயக்கிய இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விக்னேஷ் சிவன் அதைத்தொடர்ந்து இயக்கிய நானும் ரவுடி தான் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்திருந்தனர். ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த படத்தை பல மடங்கு வசூலையும் அள்ளியது.

தற்போது மீண்டும் நானும் ரவுடி தான் கூட்டணி இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | விரைவில் முக்கிய அறிவிப்பு, நயன்தாரா - விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More