Home> Movies
Advertisement

வெளியானது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ பட ஃபர்ஸ்ட் லுக்!!

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகும் ‘ஜிப்ஸி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது! 

வெளியானது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ பட ஃபர்ஸ்ட் லுக்!!

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகும் ‘ஜிப்ஸி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது! 

பத்திரிகையாளராக இருந்து இயக்குநராக மாறிய ராஜுமுருகன் ’குக்கூ' படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து ‘ஜோக்கர்’ என்ற படத்தை இயக்கினார். 

அந்தப் படம் தேசிய விருதை வென்றது. இரண்டே படத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் தரமான இயக்குநராக பெயரெடுத்திருக்கும் ராஜூ முருகன் தனது மூன்றாவது படமாக 'ஜிப்ஸி' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்

இதில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடிக்கிறார். மாறுபட்ட டைட்டிலைக் கொண்டு உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியிட்டனர். 

 

Read More