Home> Movies
Advertisement

த்ரிஷ்யம் கூட்டணியின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸ்?

த்ரிஷ்யம் படத்தை தொடர்ந்து மோகன்லால் நடிக்கும் 'தி டுவெல்த் மேன்' படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாகப்போவதாக கூறப்படுகிறது.  

த்ரிஷ்யம் கூட்டணியின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸ்?

மலையாள திரையுலகில் மெகா ஹிட் அடித்த திரைப்படம் என்றால் அது த்ரிஷ்யம் மற்றும் த்ரிஷ்யம்-2 ஆகிய படங்கள் தான்.  கடந்த 2013-ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான திரைப்படம் த்ரிஷ்யம்.  இதில் அன்சிபா ஹாசன், பேபி எஸ்தர், கலாபவன் ஷாஜன், சித்திக், ஆஷா சாரதி போன்ற பலர் நடித்துள்ளனர்.  ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது.

fallbacks

மேலும் படிக்க | 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி! மீண்டும் உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்!

இதனை தொடர்ந்து ஜீத்து ஜோசப் - மோகன்லால் வெற்றி கூட்டணி மீண்டும் 'தி டுவெல்த் மேன்' படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.  இயக்குனர் ஜீத்து ஜோசப் கடந்த ஆண்டு ஜூலை-5ம் தேதி இந்த படத்தின் தலைப்பை அறிவித்தார்.  திகில் நிறைந்த காட்சியுடன் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.

fallbacks

தற்போது இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகப்போவதாக தகவல்கள் வெளியானது.  இந்த படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் இயங்குதளம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளது.  இரண்டாவது முறையாக இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம் நேரடியாக ஓடிடியில் வெளிய இருக்கிறது.  த்ரிஷ்யம் மற்றும் த்ரிஷ்யம்-2 படங்களை போன்று இப்படமும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படத்திற்கு அணில் ஜான்சன் இசையமைத்து இருக்கிறார்.  மேலும் படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | திரைக்கதை எழுத்தாளராக புதிய பரிமாணத்தில் விஜய் சேதுபதி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More