Home> Movies
Advertisement

ஜெயிலர் பட வில்லனுக்கு சம்பளம் இவ்வளவுதானா..! கசிந்தது தகவல்!

சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் படம், ஜெயிலர். இந்த படத்தில் நடிகர் விநாயகம் வில்லனாக நடித்திருந்தார்.   

ஜெயிலர் பட வில்லனுக்கு சம்பளம் இவ்வளவுதானா..! கசிந்தது தகவல்!

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10 தேதி வெளியளாகி பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷெனில் அடித்து நொறுக்கி வருகிறது. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை அளித்துள்ளனர். 

ஜெயிலர் திரைப்படத்தின் நடிகர்கள்..

ஜெயிலர் படத்தில் பான் இந்தியா நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் ஹீரோ என்றால் மலையாள நடிகர் மோகன்லால் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் கேமியோ ரோலில் தெறிக்க விட்டிருக்கின்றனர். மேலும் இந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், தெலுங்கு நடிகர் சுனில், நடிகை தமன்னா உள்ளிட்டோரும் அவரவருக்கு உரிய கதாப்பாத்தரங்களை செவ்வனே செய்து கொடுத்திருக்கின்றனர். படத்தில் வில்லனாக நடிகர் விநாயகன் நடித்துள்ளார். இவர், பல தமிழ் படங்களில் இதற்கு முன்னர் நெகடிவ் ரோலில் நடித்து பிரபலமானவர். 

மேலும் படிக்க | ரூ.400 கோடி வசூலை தாண்டிய ஜெயிலர்.. அதுவும் 6 நாளில்

விநாயகன்: 

விஷால் நடித்திருந்த ‘திமிரு’ படத்தில் “ஈஸ்வரி அக்கா” என்று அழைத்து வில்லியின் வலது கையாக நடித்திருப்பார், விநாயகம். இவர் பெரும்பாலும் மலையாள படங்களில்தான் நடித்துள்ளார். இருப்பினும், தமிழில் இவர் நடித்த படங்கள் பெரும்பாலானவை ஹிட் அடித்துள்ளதால் இவர் நடிக்கும் கதாப்பாத்திரங்களுக்கு ரசிகர்கள் நன்றாகவே வரவேற்பு அளித்து வருகின்றனர். இவர்தான் ஜெயிலர் படத்திலும் பயங்கர வில்லனாக மிரட்டியுள்ளார். இந்த படத்தில் இவர் நடிப்பதற்காக வாங்கிய சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. 

விநாயகன் வாங்கிய சம்பளம்..

ஜெயிலர் படத்தில் படம் முழுக்க வரும் சில கதாப்பாத்திரங்களில் ஒருவர் விநாயகன். பயங்கர ரெளடியாக இப்படத்தில் கலக்கியுள்ள அவர், பிற நடிகர்களுடன் ஒப்படிகையில் இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க குறைவான சம்பளத்தையே வாங்கியுள்ளார். ‘வர்மன்’ எனும் கேரக்டரில் வரும் இவருக்கு ஜெயிலர் படத்தில் நடிக்க 35 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பிற நடிகர்களின் சம்பள விவரம்..

ஜெயிலர் படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளவர்கள் கோடி கணக்கில் சம்பளம் வாங்கியுளள்னர். அவர்களின் விவரங்கள் பின்வருமாறு..

ரஜினிகாந்த்:

கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட மூன்று தலைமுறை ரசிகர்களை ‘தலைவா..’ என்று அழைக்க வைத்த பெருமை ரஜினிகாந்திடம் மட்டுமே உள்ளது. ஜெயிலர் படத்தின் ஹீரோவாக நடித்திருக்கும் இவருக்குத்தான் இருப்பதிலேயே அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு 100-120 கோடி வரை சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த், ஜெயிலர் படத்திற்காக 150 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். இதற்கு அடுத்தடுத்த ரஜினி தன் சம்பளத்தை இன்னும் உயர்த்துவார் என கூறப்படுகிறது. 

மோகன்லாலின் சம்பளம்:

மலையாள திரையுலக ரசிகர்களால் செல்லமாக ‘லாலேட்டன்’ என அழைக்கப்படும் நடிகர், மோகன்லால். இவர், பல படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தில் மோகன்லால் தொடர்பான காட்சிகள் 10 நிமிடங்களுக்கும் குறைவாகவே இருக்கின்றன. மோகன்லால், படத்தின் பட்ஜெட்டை பொருத்து தன் சம்பளத்தை நிர்ணயிப்பதாக கூறப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடிக்க 8 கோடி வரை இவர் சம்பளம் வாங்கியுள்ளதாக சினிமா துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

தமன்னா..

தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருபவர் தமன்னா. ஆரம்பத்தில் தென்னிந்திய மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர், தற்போது இந்தி படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார். இவர் ஒரு படத்திற்கு 3-5 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார். ஜெயிலர் படத்தில் நடிப்பதற்காக இவர் 3 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்தை பின்னுக்குத்தள்ளிய ஜெயிலர்..! 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More