Home> Movies
Advertisement

அஜீத்தின் விஸ்வாசம் படத்தின் கதை இதுதானா?..

அஜித் தற்போது நடித்துவரும் திரைப்பபடம் விஸ்வாசம் என தகவல்கள் வெளியானதை அடுத்து இப்படத்தின் கதை என்னவென்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அஜீத்தின் விஸ்வாசம் படத்தின் கதை இதுதானா?..

நடிகர் அஜீத் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். தற்போது, விசுவாசம் படத்தில் நடித்துவரும் நடிகர்களின் பட்டியலானது தற்போது ஒவ்வொன்றாக வெளியானது. 

இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க டி.இமான் முதன் முறையாக அஜீத் படத்திற்கு இசையமைக்கிறார்.இதையடுத்து, நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படமானது வீரம் இரண்டாம் பாகத்தை போன்று இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.  

மேலும், இந்த படம் வடசென்னை கதையில் உருவாக இருப்பதாகவும் அஜீத் வடசென்னை தமிழ் பேசி நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது, விசுவாசம் படம் வீரம் படத்தைப்போன்று கிராமத்து கதையில் தயாராகயிருப்பதாக சொல்கிறார்கள். 

அந்த வகையில், வீரம் படத்தின் இரண்டாம் பாகம் போன்றே இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். அதோடு, வீரம் படத்தைப்போன்றே படம் முழுக்க வெள்ளை வேஷ்டி சட்டை கெட்டப்பில் நடிக்கிறாராம் அஜீத்.

Read More