Home> Movies
Advertisement

திரையரங்கில் வெளியாகப் போகிறதா சார்பட்டா பரம்பரை?

கடந்த மாதம் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமேசான் பிரைம்மில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

திரையரங்கில் வெளியாகப் போகிறதா சார்பட்டா பரம்பரை?

பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை(Sarpatta Parambarai).  1970களில் நடக்கும் குத்துச்சண்டை போட்டிகளை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. ஆர்யா மட்டுமன்றி படத்தில் நடித்த சக நடிகர்களும் உண்மையான குத்துச்சண்டை வீரர்கள் போலவே தங்களை தயார்படுத்திக் கொண்டு நடித்திருந்தனர்.  அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  ரஞ்சித்தின் அட்டகத்தி,மெட்ராஸ் படங்களின் வெற்றிக்குப் பிறகு காலா,கபாலி போன்ற படங்கள் சரியாக மக்களிடம் சென்று அடையாமல் இருந்தது.  சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஞ்சித் தற்போது தன் பழைய ஃபார்முக்கு திரும்பிவிட்டார் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். 

ஓடிடியில் வெளியாகி வெற்றியடைந்த படங்களை மக்கள் திரையரங்கில் பார்க்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தினை திரையரங்குகளில் பார்க்க முடியாதா என்று ரசிகர்கள் இணையத்தில் கோரிக்கை வைத்து உள்ளனர்.  தற்போது கொரோனா அலை குறைந்து வரும் நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் சார்பட்டா பரம்பரை (Sarpatta Parambarai) திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  

ALSO READ சார்பட்டா படக்குழுவிடம் விளக்கம் கேட்டு அதிமுக சார்பில் நோட்டீஸ்

தற்போது சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ளது.  இந்நிறுவனம் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் திரையரங்கு உரிமையையும் அமேசன் பிரைமிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஆனால் சாற்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடி பிரிமியர் செய்யப்பட்டதால் திரையரங்கில் வெளியிட அனுமதிக்க முடியாது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.  இதனால் இப்படம் திரையரங்கிற்கு கண்டிப்பாக வெளியாகாது என்று உறுதியாகியுள்ளது.  வரும் விநாயகர் சதுர்த்தியன்று சார்பட்டா பரம்பரை திரைப்படம் தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது.  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe

Read More