Home> Movies
Advertisement

இந்தியன் 2: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்க தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்தியன் 2: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த படம் இந்தியன் 2. இந்த படம் கொரோனா வைரஸ் பரவல், செட் விபத்து, கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி இருந்தது. 

இதனால் இந்தியன் 2 (Indian 2) படப்பிடிப்பு தாமதமாகி வந்ததால் இயக்குனர் ஷங்கர் (Director Shankar) அடுத்த பட பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்த செயலால் அதிருப்தியடைந்த இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, தங்கள் படத்தை முடித்துக்கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்க தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை நாடியது. 

ALSO READ | இந்தியன் 2 படத்திற்கு சோதனை மேல் சோதனை

இதற்கு இருதரப்பும் பேசி பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து இவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில்,  இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா லைகா நிறுவனம், இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் விரைவில் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | அஜித், ஷங்கர் இணைய அதிரடியாய் வரவுள்ளதா ‘முதல்வன்-2’? Latest Update!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More