Home> Movies
Advertisement

Ileana D'Cruz: தாயானார் இலியானா..! என்ன குழந்தை தெரியுமா..?

Ileana D'Cruz: நடிகை இலியானாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இலியானா.   

Ileana D'Cruz: தாயானார் இலியானா..! என்ன குழந்தை தெரியுமா..?

பிரபல நடிகை இலியானவிற்கு குழந்தைக்கு தாயாகியுள்ளார். குழந்தையின் போட்டோவை இணையத்தில் பகிர்ந்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கூடவே, குழந்தையின் பெயர் என்ன என்பதையும் அவர் பகிர்ந்துள்ளார். 

இலியானா:

2006ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இலியானா. இந்தி நடிகையான இவர், தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகர்களாக விளங்கும் மகேஷ் பாபு, ரவி தேஜா உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார். 2012ஆம் அண்டு தமிழில் வெளியான ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜாேடியாக நடித்திருந்தார். இப்படத்தில் வந்த “இருக்கானா இடுப்பிருக்கானா..” பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு ரசிகர்கள் பலர் இவரது இடுப்பிற்கு அடிமையாகினர். ஆனால் அதுதான் இலியான கடைசியாக நடித்த படம். அதன் பிறகு அவர் தமிழ் படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார். 

மேலும் படிக்க | பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி..! துடித்துப்போன ரசிகர்கள்-இப்போ எப்படி இருக்கு?

தாயானார் இலியானா:

நடிகை இலியானா, சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த குழந்தைக்கு தந்தை யார் என்ற விவரத்தையோ, அவர் எப்போதிருந்து கர்பமாக இருக்கிறார் என்ற விவரத்தையோ அவர் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், நேற்று அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தை பிறந்துவிட்ட மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்திருந்தார். 

என்ன குழந்தை?

இலியானா, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த குழந்தைக்கு அவர் கோ ஃபீனிக்ஸ் டோலன் (Koa Phoenix Dolan) என பெயரிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்களது அன்பிற்குறிய ஆண் குழந்தையை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைப்பதில் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது..” என பதிவிட்டுள்ளார். மேலும் இதயம் முழுவதும் ஆனந்தம் நிறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தை கடந்த 1ஆம் தேதியே (செவ்வாய் கிழமை) பிறந்ததையொட்டி, அவர் தற்போதுதான் அந்த பதிவை வெளியிட்டிருக்கிறார். 

தந்தை இவரா..? 

நடிகை இலியானா, குழந்தையின் தந்தை யார் என்பதை இன்றளவும் வெளியில் கூறாமல் இருக்கிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ நீபோன் என்ற புகைப்பட கலைஞரை இலியானா சில ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து வந்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே அவர் ஆண்ட்ரூவுடன் காதல் முறிவு ஏற்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிடிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் தனது கர்பம் குறித்து பதிவிட்டதை தொடர்ந்து, அந்த குழந்தைக்கு தந்தை யார் என்றும் இலியானாவின் காதலர் யார் என்றும் ரசிகர்கள் தேடி வந்தனர். சிலர், நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரரைதான் இலியானா காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் பல வருடங்களாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காதலர் குறித்து இலியானா:

சில வாரங்களுக்கு முன்னர் இலியானா ஒரு ஆணுடன் இருக்கும் போட்டோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். முகம் தெரியாத அளவிற்கு அந்த நபருடன் போட்டோ எடுத்து பதிவிட்டிருந்த இலியானா, கர்பமாக இருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம் என்றும் அதை இவர் போல ஒருவருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம் என்றும் தெரிவித்திருந்தார். இவர்தான் தனக்கு எல்லா நிலைகளிலும் பக்க துணையாக இருப்பதாகவும் தன்னை எப்போதும் சிரிக்க வைத்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். கடினமான தருணங்கள் கூட இவர் தன்னுடன் இருக்கையில் கடினமாக தெரியவில்லை என அவர் அந்த பதிவில் கூறியிருந்தார். 

மேலும் படிக்க | 25 கோடி கடன் வாங்கினேனா..? வதந்தி பரப்பியோரை விளாசிய சமந்தா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More