Home> Movies
Advertisement

எதற்கும் துணிந்தவன் படத்தின் அப்டேட் இதோ!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எதற்கும் துணிந்தவன் படத்தின் அப்டேட் இதோ!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நட்சத்திர நடிகர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களை அறிவித்து நடித்துக் கொண்டிருப்பவர் சூர்யா.  சூர்யாவின் நடிப்பில் கடந்த வருடம் ஓடிடியில் சூரரைப் போற்று திரைப்படம் வெளிவந்தது.  அதற்குப் பிறகு சமீபத்தில் நவரசா என்ற வெப்தொடர் வெளியானது.  தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடத்திக்கொண்டிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் 51 ஒருநாள் தொடர் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடி நிறைவடைந்தது. 

fallbacks

தற்போது இப்படத்தில் இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இப்படத்தினை வேகமாக முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தின் படப்புடிப்பிற்காக சூர்யா பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது.  கலைப்புலி தாணு இயக்கத்தில் உருவாகும் இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படுவதால் பல பயிற்சிகளை முன்கூட்டியே மேற்கொள்ள உள்ளார் சூர்யா. 

சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளது.  மேலும் அவர் தயாரிப்பில் உருவாகியுள்ள மூன்று படங்களும் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாக உள்ளது.  வாடிவாசல் படத்தினை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.  இப்படத்தினை 11 இயக்குனர்கள் சேர்ந்து தயாரிக்க உள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More