Home> Movies
Advertisement

WATCH Video : தாராள பிரபு படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ காட்சி!!

விந்து தானத்தை மையப்படுத்தி உருவாகி வரும் படம் தாராள பிரபு படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. 

WATCH Video : தாராள பிரபு படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ காட்சி!!

‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம்  ‘தாராள பிரபு’. பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த படம். 

இந்த படத்திற்கு  ‘தாராள பிரபு' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘தாராள பிரபு' திரைப்படத்தில் ஹரிஷ் கல்யான் நடித்து வருகிறார். விந்தணு தானத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். இப்படத்தில் ஹரிஷுக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் விவேக் நடிக்கிறார்.

அண்மையில் இப்படத்தின் டீஸர், டிரைலர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த படம் வரும் 13 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் (Dharala Prabhu Sneak Peek) வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விந்து தானத்தை மையப்படுத்தி ஹிந்தியில் வெளியான படம் விக்கி டோனர். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக தாராள பிரபு படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Read More