Home> Movies
Advertisement

மனம் மாறிய அன்னம்.. அமுதாவுக்கு டபுள் ஹாப்பி நியூஸ் - அமுதாவும் அன்னலட்சுமியும்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.

மனம் மாறிய அன்னம்.. அமுதாவுக்கு டபுள் ஹாப்பி நியூஸ் - அமுதாவும் அன்னலட்சுமியும்!

 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பரமுவும் வடிவேலும் அமுதா வீட்டு வேலை செய்வதை பார்த்து கிண்டலடிக்க அமுதா அவர்களிடம் என் வீட்டு வேலையைத் தானே செய்யுறேன் இதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை என சொல்கிறாள்.

அடுத்ததாக மாணிக்கமும் செந்திலும் அதை பார்த்து பீல் பண்ண கோயிலில் அன்னம் உட்கார்ந்து கொண்டிருக்க அப்போது நேற்று அமுதாவிடம் பேசிய சாமியார் வந்து உடம்பு எப்படிமா இருக்கு நல்லா இருக்கா என்று கேட்டு நேத்து உன் மருமக வந்தா நீ நல்லவன் என்பதற்காக கோவில்ல வந்து வேண்டுனா, நான் தான் சொன்னேன் உனக்கு புடிச்ச விஷயத்தை தியாகம் பண்ணா கண்டிப்பா உங்க அத்தை உயிர் பிழைப்பாங்கன்னு ஏதோ பண்ணி இருக்கா போல இருக்குது அதனாலதான் நீ இப்படி வந்திருக்கிற இதுக்கும் உன் மருமகதாமா காரணம் என்று சொல்லிவிட்டு போகிறார். 

உடனே அன்னம் யோசித்து அமுதா மரத்தில் கட்டிய பேப்பரை பார்க்க அதில் எனக்கு பிடிச்ச படிப்பு வேண்டாம் எனக்கு எங்க அத்தை தான் முக்கியம் எங்க அத்தை உயிரை காப்பாத்துங்க என்று எழுதியிருக்க அதை பார்த்து அன்னம் பீல் பண்ணுகிறாள். பின்னர் அன்னம் கோயிலில் இருந்து வீட்டுக்கு வர செந்திலிடம் அமுதாவை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போ என சொல்ல அனைவரும் பீல் பண்ணுகின்றர். 

அமுதா ஸ்கூலுக்கு கிளம்பி போ என்று சொல்ல அனைவரும் பார்க்க வேதநாயகி என்ன அன்னம் சொல்ற என கேக்க எனக்காக என் உயிரை காப்பாத்தறதுக்காக அவளுக்கு பிடித்து படிப்பையே தியாகம் பண்ணி இருக்கா அப்போ அவ தான் ஜெயிச்சா அத்தை என்று ஃபீல் பண்ணி சொல்ல அமுதா கண் கலங்குகிறாள். 

அதை தொடர்ந்து அன்னம் இப்ப சொல்ற அத்தை எப்போ அவ எனக்காக ஆசையை தியாகம் பண்ணி ஜெயிச்சாலும் அவளுக்கு ஒரு நல்ல அத்தையா இருக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு அதுக்கு அவ ஆசைப்பட்டதை நான் அவளுக்கு கொடுப்பது தான் சரியா இருக்கும் நான் தான் இதை புரிஞ்சுக்காம இத்தனை நாள் முட்டாள் தனமாக இருந்துட்டேன் என்று அமுதாவிடம் திரும்பி அமுதா நீ படிக்கப் போ என்று சொல்ல அமுதா ஓடி வந்து அன்னலட்சுமியை கட்டிக் கொள்கிறாள். 

மேலும் படிக்க | புஷ்பா 2: ஃபஹத் ஃபாசிலின் புதிய லுக்.. பிறந்தநாளில் வெளியான தெறி போஸ்டர்!

அன்னம் ஸ்கூல் யூனிபார்மை எடுத்து கொண்டு வந்து அமுதாவிடம் கொடுக்க அமுதா சந்தோஷப்படுகிறாள். அதை தொடர்ந்து வாசலில் பழனி உமா காரில் வந்து இறங்க மாணிக்கம் இப்பதான் பிரச்சனை முடிந்து சந்தோஷமா இருக்குன்னு பார்த்தா இது ஏதோ புதிய பிரச்சனை இழுத்துட்டு வந்தோமோ என்று யோசிக்க அமுதா செந்தில் வாங்க என்று அழைக்க உள்ளே வருகின்றனர். 

பையில் இருந்து தட்டில் ஸ்வீட் வைத்து கொடுக்க அனைவரையும் பார்க்கும் என்ன விஷயம் என்று கேட்க உமா கர்ப்பமா இருக்கா என்று சொல்ல அமுதா உட்பட அனைவருக்கும் சந்தோஷம் அமுதா சென்று உமாவை கட்டிப்பிடித்து வாழ்த்துக்கள் என்று சொல்ல அதுக்கு தான் சொல்ல வந்தோம் அது மட்டும் இல்லாம கோவில்ல ஒரு சின்னதா பங்க்ஷன் ஏற்பாடு பண்ணி சத்து தண்ணி குடுக்க போறோம் நீங்க எல்லாரும் வந்துருங்க என அழைத்து விட்டு உமாவும் பழனியும் பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | விஜய் - சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்! அதுவும் இந்த தேதியிலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More