Home> Movies
Advertisement

Happy birthday: மகிழ்ச்சியாக இருக்க பல காரணங்கள் சொல்லும் ஸ்ருதி கமலஹாசன்!

 பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஸ்ருதி ஹாசன்! நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு நீண்ட பதிவை எழுதியுள்ளார்

Happy birthday: மகிழ்ச்சியாக இருக்க பல காரணங்கள் சொல்லும் ஸ்ருதி கமலஹாசன்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ஸ்ருதி ஹாசனுக்கு வாழ்த்துகளை பலர் சொன்னாலும், அவரது ரசிகர்களின் வாழ்த்துக்களே அவருக்கு மிகவும் பிடித்தமானதாம்!

சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன. அன்பான குடும்பம் முதல் அன்பைக் கொட்டும் ரசிகர்கள் என தான் மகிழ்ச்சியாக இருக்க பல காரணங்கள் உள்ளன என்று ஸ்ருதி ஹாசன் நம்புகிறார்.

தனது பிறந்தநாளுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு நீண்ட பதிவை எழுதியுள்ளார். 

வாழ்க்கையில் தனக்கு கிடைத்த அனைத்திற்கும் எவ்வளவு நன்றி கடன் பட்டிருக்கிறேன் என ஸ்ருதி கமல்ஹாசன் நீண்ட பதிவை எழுதி அனைவரையும் நெகிழச் செய்துள்ளார்.

யதார்த்தமான மற்றும் உண்மையான மனிதர்கள் தன்னை சுற்றியிருப்பதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார்.  

ALSO READ | சிவகார்த்திகேயனின் ’டான்’ ரிலீஸ் தியேட்டரா? OTT -ஆ? இதோ அப்டேட்

தனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு முத்தம் கொடுப்பதாக தொடங்கியிருக்கும் அந்தப் பதிவில், "நான் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டவள். மேலும் நான் மிகவும் நேசிக்கப்படுகிறேன், மேலும் ஒரு ஆண்டு என் வாழ்வில் கடந்துவிட்டது.. எனக்கு இன்னும் கற்றுக் கொள்ள, பார்க்க, நேசிக்க இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன" என்று ஸ்ருதி எழுதியுள்ளார்.

நேராகவும் ஆன்லைனிலும் தான் சந்திக்கும் அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்கிறேன் என்று கூறும் ஸ்ருதி, "நான் எப்பொழுதும் யதார்த்தவாதிகளால் சூழப்பட்டிருக்கிறேன்.  நான் நேரிலோ அல்லது ஆன்லைனிலோ சந்திக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக்கொண்டேன். நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அன்பு எப்போதும் வழி நடத்தும்.... அனைவருக்கும் மிக்க நன்றி" என தசாவதார நாயகனின் மகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக பிரபாஸுக்கு ஜோடியாக சாலார் படத்தில் நடிக்க உள்ள நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ALSO READ | பற்றவைக்க தயாராகும் சுரேஷ் தாத்தா.. ஆட ரெடியாகும் அபிராமி..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More