Home> Movies
Advertisement

இன்று தனுஷ் தனது 34_வது பிறந்தநாளை மலேசியாவில் கொண்டாடுகிறார்!!

இன்று தனுஷ் தனது 34_வது பிறந்தநாளை மலேசியாவில் கொண்டாடுகிறார்!!

தனுஷ் இன்று தனது 34வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுகிறார்.

தற்போது தனுஷ் மலேசியாவில் இருக்கிறார். அங்கு மலேசிய ரசிகர்கள் தனுஷிற்கு உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இதனை தனுஷ், தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

 

 

விஐபி-2 பட விளம்பரப்படுத்த மலேசியா சென்றுள்ள தனுஷ்வுடன், அவரது மச்சினி சௌந்தரியா ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகை கஜோல் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுகிறார். 

சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ஹேப்பி ஃபர்த்டே டி சார்! என்னுடைய வழிகாட்டி, என்னுடைய சிறந்த நண்பன் என கூறியுள்ளார்.

தனுஷிற்கு அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

விஐபி-2 படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Read More