Home> Movies
Advertisement

ஜி.வி. பிரகாஷ்-ன் ஆயிரம் ஜென்மங்கள் டிரெய்லர் வெளியீடு!

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள படம் ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ஜி.வி. பிரகாஷ்-ன் ஆயிரம் ஜென்மங்கள் டிரெய்லர் வெளியீடு!

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள படம் ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

எழில் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள படம் ஆயிரம் ஜென்மங்கள். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நிகிஷா படேல், ஈஷா ரெப்பா முதலியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், சதீஷ் உள்ளிட்ட காமெடி பிரபலங்களும் நடித்துள்ளனர்.

தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த ’எக்கடிக்கி போதாவு சின்னவாடா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

 

 

மேலும் 'ஆயிரம் ஜென்மங்கள்' படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More