Home> Movies
Advertisement

பிக்பாஸ் வீட்டில் ஜி.பி.முத்து வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ்-6 போட்டியாளர்களுள் ஒருவராக பங்கேற்ற ஜி.பி.முத்து தனது மகனுக்காக பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு சென்று மக்களின் மனதை வென்றுள்ளார்.  

பிக்பாஸ் வீட்டில் ஜி.பி.முத்து வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் கடந்த அக்டோபர்-9ம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது.  இந்த முறை 21 போட்டியாளர்கள் பங்குபெற்றுள்ளனர், அதில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நம்முடைய ஜி.பி.முத்து.  ஒவ்வொரு சீசன் தொடங்கும்போதும் அதில் போட்டியாளராக ஜி.பி.முத்து கலந்துகொள்வார் என செய்திகள் வெளியாகும், ஆனால் அந்த செய்தி ஒவ்வொரு தடவையும் பொய்யாகி போன நிலையில் இந்த சீசனில் தான் அந்த செய்தி மெய்யானது.  தலைவர் ஜி.பி.முத்து உள்ளே வந்ததும் கண்டென்ட்டுக்கு பயம் இருக்காது என பலரும் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர், இவர் இருப்பதால் நிகழ்ச்சியின் டிஆர்பியும் எகிறிவிடும் என்று கருதப்பட்டது.

fallbacks

மேலும் படிக்க | வாரிசு படம் செய்த சாதனை! தமிழ்நாட்டில் இத்தனை கோடிக்கு விற்பனை?

ஆரம்பத்தில் ஜி.பி.முத்துவை மக்கள் எவ்வளவு மோசமாக பேசினாலும் போக போக அவருக்கு ரசிகர்களாக மாற தொடங்கிவிட்டனர்.  இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஜி.பி.முத்து தான் என்று ரசிகர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்து வந்த நிலையில், அவர் தனது மகனுக்காக நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.  இருப்பினும் மகனுக்காக நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பணத்தையும், புகழையும் தூக்கி வீசி மக்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்துவிட்டார், இதுவரையில் இவரை கலாய்த்தவர்கள் கூட இப்போ இவரை புகழ ஆரம்பித்துவிட்டனர்.  நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் தனது மகனுக்கு பிரியாணி வாங்கி குடுத்து பாச மழை பொழிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்தார்.

fallbacks

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இரண்டு வாரங்கள் மட்டுமே இருந்த இவர் எவ்வளவு சம்பளம் பெற்றுக்கொண்டார் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  இவரது ஒரு நாளைய சம்பளம் ரூ.15,000க்கு மேல் என்று கூறப்படுகிறது, உதாரணமாக இவரது ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 என வைத்துக்கொண்டால் இவர் தங்கியிருந்த மொத்த நாட்களுக்கு சேர்த்து இவரது சம்பளம் ரூ.2,10,000.  வெறும் 14 நாளில் இவர் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியிருப்பது அனைவரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் இவர் யூடியூப் மூலமாக மாதந்தோறும் ரூ.1 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டி வருகிறாராம்.

மேலும் படிக்க | திரைப்பட இயக்குநராக அவதாரம் எடுக்கும் தமிழ்ப்பேச்சு ராஜ்மோகன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More