Home> Movies
Advertisement

‘குட் நைட்’ நாயகன் மணிகண்டனின் அடுத்த படம்..! விஜய் சேதுபதி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்!

குட் நைட் படத்தின் நாயகன் மணிகண்டன், புதிதாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான பட விழா நேற்று நடைப்பெற்றது.   

‘குட் நைட்’ நாயகன் மணிகண்டனின் அடுத்த படம்..! விஜய் சேதுபதி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர், மணிகண்டன். இவர், ரஜினிகாந்துடன் ‘காலா’ படத்தில் அவருக்கு மகனாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதவரை பெற்றிருந்த ‘குட்நைட்’ படத்தின் கதாநாயகனும் இவர்தான். 

குட் நைட் திரைப்படம்:

புதுமுக இயக்குநர் விநாயக் சந்திர சேகரன் இயக்கத்தில் வெளியாகி ரசிக்களின் நல்ல வரவேற்பினை பெற்ற படம், குட் நைட். பெரியஹீரோக்களின் படம் மட்டுமே  தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியான நல்ல வரவேற்பினை பெற்று வசூலையும் குவித்தது.  இப்படம்,  தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த படத்தினை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்திருந்தன.

மேலும் படிக்க | பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி..! துடித்துப்போன ரசிகர்கள்-இப்போ எப்படி இருக்கு?

மணிகண்டனின் அடுத்த படம்

குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள், தற்போது இன்னொரு படத்தையும் தயாரிக்க உள்ளது. குட் நைட் படத்தை போலவே இந்த படத்திலும் புதுமுக இயக்குநரான பிரபுராம் வியாஸ் அறிமுகமாகிறார். இதில், குட்நைட் மணிகண்டனே கதாநாயகனாக நடிக்கிறார். ‘மாடர்ன்லவ்’ ஆந்தாலஜி தொடரில் நடித்து பிரபலமான ஸ்ரீகெளரி பிரியா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல குணச்சித்திர நடிகர் கண்ணாரவி இதில் முக்கியவேடத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, பரத் விக்ரமன் படத்தொகுப்பாளராக இருக்கிறார்.

படத்தின் கதை..

குட் நைட் படத்தை போலவே, மணிகண்டனின் இந்த படமும் காதல்-குடும்ப கதையை மையமாக கொண்டுள்ளது. தற்காலக் காதலும் அதில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளும் இந்த படத்தில் இடம் பெற உள்ளன. அனைவரையும்  ரசிக்க வைக்கக்கூடிய திரைக்கதை மூலம் ரசிகர்களை ஈர்க்கும் படமாக இது இருக்கும் என்கிறார் இயக்குநர் பிரபுராம்வியாஸ். இந்த படத்தினை சென்னை மற்றும் கோவா அருகேயுள்ள கோகர்ணா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பை கிளாப் அடித்துத் தொடங்கிவைத்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இப்போது  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது

குட் நைட் படத்தின் வசூல்-பட்ஜெட்

குட் நைட் படம், கடந்த மே மாதம் வெளியானது. மணிகண்டனுக்கு ஜோடியாக ‘முதல் நீ முடிவும் நீ’ படம் மூலம் பிரபலமான மீதா ரகுநாத் நடித்திருந்தார். ரமேஷ் திலக் கதாப்பாத்திரத்தில் வந்தார். படம் வெளியான போது பெரிதும் ரசிகர்கள் இதை பெரிதும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்ததால் ரசிகர்கள் இதை திரையரங்கிற்கு சென்று பார்த்தனர். 4 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவாகியிருந்த இப்படம், மொத்தமாக 10 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்பட்டது. தற்போது ஓடிடியிலும் இப்படம் ட்ரெண்டிங்கிள் உள்ளது. 

மேலும் படிக்க | ஜெயிலர் படம் எப்படி இருக்கு..? படம் பார்த்த பிரபலம் சொன்ன விமர்சனம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More