Home> Movies
Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸிற்கு விசில் போட்ட நடிகர் விஜய்-வைரல் வீடியோ!

Actor Vijay Viral Video : நடிகர் விஜய், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விசில் பாேட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

சென்னை சூப்பர் கிங்ஸிற்கு விசில் போட்ட நடிகர் விஜய்-வைரல் வீடியோ!

Actor Vijay Viral Video : தமிழ் திரையுலகின் டாப் நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், நடிகர் விஜய். விஜய் குறித்து பேசும் போது அவரது ஹிட் படங்கள் நினைவிற்கு வருகிறதாே இல்லையோ, அவரது அமைதியான சுபாவம் நினைவிற்கு வந்து விடும். ஆனால் அவரும், தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ஹீரோவாக உருவாவதற்கு முன்னர் அவ்வப்பாேது தனது நகைச்சுவையான குணாதிசயத்தை வெளிகொணர்ந்திருக்கிறார். அப்படி நடந்த ஒரு ரேர் ஆன விஷயத்தை இங்கு வீடியோவாக பார்ப்போம். 

அமைதியாக சுபாவம் கொண்ட விஜய்..

நடிகர் விஜய், படங்களில் பக்கம் பக்கமாக பஞ்ச் டைலாக் பேசுவார் என்பதை அவரது ரசிகர்கள் கூட மறுக்க மாட்டார்கள். அப்படி, கேமராவிற்கு முன்னர் பட டைலாக்கை எவ்வளவு நீளமாக கொடுத்தாலும் பேசும் அவர், திரைக்கு பின்னால் ஓரிரண்டு வார்த்தையை தவிர வேறு எதுவும் பேசாத நடிகராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து, அரசியல் நாட்டம் வந்த பிறகுதான் மேடை நிகழ்ச்சிகளில் பேசுவது, குட்டி ஸ்டோரி கூறுவது என தன்னை க்ரூம் செய்து கொண்டார். ஆனால், 10 வருடங்களுக்கு முன்னால் இருந்த நடிகர் விஜய்யே வேறு. அவர் அமைதியாக இருப்பதற்கு காரணம் என்ன என்று அவருக்கே தெரியாது. ஏதாவது ஒரு மொமண்டில்தான், அவர் தனது குழந்தை தனத்தையும் குசும்பு தனத்தையும் வெளி கொண்டு வருவார். 

சி.எஸ்.கே மேட்சில் நடிகர் விஜய்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழகத்தில் பல காேடி ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது அனைவருக்குமே தெரியும். அப்படி, சென்னையின் தீவிர ரசிகர்களுள் ஒருவர், நடிகர் விஜய். இவர் ஒரு முறை பேட்டியில் தனது மகன் சஞ்சய் சென்னை அணியின் தீவிர ரசிகர் என்பதை தெரிவித்திருக்கிறார். ஐபிஎல் போட்டி ஆரம்பித்த புதிதில் சென்னையில் நடைப்பெற்ற ஒரு போட்டியின் போது, விஜய் தன் வாயில் விசிலை வைத்துக்கொண்டு கையை ஆட்டி, குதித்து நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

fallbacks

மேலும் படிக்க | தளபதி 69-ல் 3 நாயகிகள்?! ஒன்று த்ரிஷா, இன்னொன்று சமந்தா 3வது யார் தெரியுமா?

“சேட்ட புடிச்ச பையன் சார் தளபதி..”

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “சேட்ட புடிச்ச பையன்பா நம்ப தளபதி..” என கமெண்ட் செய்து வருகின்றனர். ஐபிஎல் சீசன் தொடங்கி, விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதால், நடிகர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இது போல செய்த க்யூட்டான விஷயங்கள் தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது. 

 

விஜய் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? 

விரைவில் முழு நேர அரசியலில் களமிறங்க இருக்கும் நடிகர் விஜய், தற்போது தனது 68வது படமான GOAT-ல் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்க இருக்கும் விஜய், அதுதான் தனது இறுதி படம் என்பதை தெரிவித்து இருக்கிறார். இவரது 69வது படம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால், இப்படத்தை ஹெச்.வினோத் இயக்க இருக்கிறார் என்றும், இவர் கூறிய கதையை விஜய் ஓகே செய்து விட்டார் என்றும் திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 

விஜய், தற்போது GOAT படப்பிடிப்பிற்காக படக்குழுவுடன் ரஷ்யாவிற்கு சென்றுள்ளார். அங்கு ஷூட்டிங் முடிந்த பிறகு சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | விஜய் கட்டிய கோயிலில் ராகவா லாரன்ஸ்! வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More