Home> Movies
Advertisement

காதலை உறுதிபடுத்திய கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனுக்கு அனுப்பிய மெசேஜ்.!


மஞ்சிமா மோகனுக்கு கவுதம் கார்த்திக் அனுப்பியிருக்கும் பிறந்தநாள் வாழ்த்து செய்தி, இருவருக்கும் இடையேயான காதல் கிசுகிசுக்கு வலுசேர்த்துள்ளது. 

காதலை உறுதிபடுத்திய கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனுக்கு அனுப்பிய மெசேஜ்.!

சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் கௌதம் மேனனால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். அடுத்தடுத்த படங்களில் தன்னை திறமையான நடிகையாக நிரூபித்துள்ளார். இளம் நடிகர் கௌதம் கார்த்திக்கும், மஞ்சிமாவும் காதலிப்பதாகவும், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

மேலும் படிக்க | ஹெவி கிராஃபிக்ஸில் உருவாகும் ‘க்ரிஷ்-4’: வேற லெவல் அப்டேட்!

2019 ஆம் ஆண்டு வெளியான 'தேவராட்டம்' திரைப்படத்தின் தயாரிப்பின்போது ஜோடியாக நடித்த இருவரும், காதலில் விழுந்துவிட்டதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது., ஆனால், அவர்கள் இருவரும் தங்களின் ரிலேஷன்ஷிப் பற்றி இதுவரை வாய்திறக்கவில்லை.இதனிடையே, அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய மஞ்சிமா மோகனுக்கு கவுதம் கார்த்திக் தெரிவித்திருக்கும் பிறந்நாள் வாழ்த்து செய்தி வைரலாகியுள்ளது. 

fallbacks

அந்த செய்தி அவர்கள் இருவருக்கும் இடையிலான காதலை உறுதிப்படுத்தும் விதமாகவும் உள்ளது. மஞ்சிமா மோகனுக்கு இன்ஸ்டாவில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள கவுதம் கார்த்திக், "இந்த வாழ்வில் இதுநாள் வரை நான் பெற்ற அதிலேயே பெருமைப்படக்கூடிய விஷயமாக ஒன்று இருந்தது என்றால் என்னுடைய வாழ்க்கையில் உன்னை போன்ற ஒருவர் இருப்பதுதான்' என்று கூறி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு மஞ்சிமா மோகன் ஹார்டின் சிம்பளை ரிப்ளேவாக கொடுத்துள்ளார். தற்போது, ஏ.எல்.விஜய்யின் ‘அக்டோபர் 31 லேடீஸ் நைட்’ திரைப்படத்தில் மஞ்சிமா நடித்து வருகிறார். கவுதம் கார்த்தி ’பத்து தல’ மற்றும் பார்த்திபனுடன் ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க | கொடைக்கானலில் பயங்கர காட்டுத்தீ...விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நடிகர் கார்த்தி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More