Home> Movies
Advertisement

உருவாகிறது வாஜ்பாய் பயோபிக்! - லீடிங் ரோலில் நடிக்கப்போவது யார்?

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பயோபிக் எடுக்கப்படவுள்ள நிலையில் அப்படம் குறித்து சில தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

உருவாகிறது வாஜ்பாய் பயோபிக்! - லீடிங் ரோலில் நடிக்கப்போவது யார்?

இந்திய அரசியலில் மிக முக்கியமான பெயர்களுள் ஒன்று - அடல் பிகாரி வாஜ்பாய். இந்தியாவின் பிரதமராக 3 முறை பதவி வகித்த வாஜ்பாய் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றுள்ளார். 

லோக்சபா மற்றும் ராஜ்ய சபா என 12 முறை உறுப்பினராகச் செயல்பட்ட வாஜ்பாய், சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தை அலங்கரித்தவர். அதுமட்டுமல்லாமல் இன்று மத்தியில் ஆளும் கட்சியாக இருந்துவரும் பாரதிய ஜனதா கட்சியைத் தோற்றுவித்தவர்களுள் மிக முக்கியமானவரும் கூட. 

உடல்நலத்தைக் கணக்கில் கொண்டு கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலிருந்து விலகி இருந்த வாஜ்பாய் கடந்த 2018ஆம் ஆண்டு காலமானார். தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்துவந்த வாஜ்பாய், அரசியல் அரங்கில் எதிர்முகாமைச் சேர்ந்த பலராலும்கூட பாராட்டு பெறக் கூடியவராக இருந்தமை இவர் குறித்த கவனத்துக்குரிய ஒன்றாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

fallbacks

அரசியல் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்துத் திரைப்படங்கள் எடுப்பது சமீப காலமாக அதிகரித்துவருகிறது. அந்த வகையில் வாஜ்பாயின் பயோபிக்கையும் எடுக்கத் தற்போது தயாராகியுள்ளதாம் திரையுலகம். 

அதன்படி எழுத்தாளர் உல்லேக் என்.பி எழுதிய 'The Untold Vajpayee: Politician and Paradox’ எனும் புத்தகத்தைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படவுள்ளது. அடல் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் பனுசாலி ஸ்டுடியோஸ் மற்றும் லெஜண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படவுள்ளது.

மேலும் படிக்க | ஆஸ்கரிடமிருந்து வந்த அழைப்பு- நடிகர் சூர்யாவின் பதில் என்ன?

fallbacks
2023ஆம் ஆண்டு இதன் படப்பிடிப்பைத் தொடங்கி அவ்வாண்டு வாஜ்பாய் பிறந்த தினத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதன் இடையே வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்க சில முக்கிய நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.

பான் இந்தியா ரிலீசாக வெளியாக உள்ளதாகக் கூறப்படுவதால் இப்படத்தில் சில தமிழ் நடிகர்களும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | மீனாவுக்குத் தூணாக இருந்த அவரது கணவர் வித்யாசாகர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More