Home> Movies
Advertisement

19 திரைப்பிரபலங்கள் வெளியிட்ட சோனியா அகர்வாலின் கிராண்மா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் என்கிற அழுத்தமான நம்பிக்கையோடு 'கிராண்மா' என்கிற படம் உருவாகியுள்ளது.

19 திரைப்பிரபலங்கள் வெளியிட்ட சோனியா அகர்வாலின் கிராண்மா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் என்கிற அழுத்தமான நம்பிக்கையோடு 'கிராண்மா' என்கிற படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தை GMA பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் தயாரித்துள்ளனர். ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் சோனியா அகர்வால் (Sonia Aggarwal), விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர். மலையாளப் படங்களில் நாயகனாக நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வரவேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை திரையுலகின் பிரபலங்கள் சோனியா அகர்வால், விமலாராமன், சார்மிளா, பாவனா மேனன், வரலட்சுமி சரத்குமார், ரம்யா நம்பீசன், இனியா, சூர்யா ஜே. மேனன், ஆரதி சாஜன், லியானா லிஷாய், தீப்தி சதி, ஷிவதா, மரினா மைக்கேல , கோகுல்சுரேஷ் , சரத் அப்பானி, ஹேம்நாத் மேனன், அன்சன் பால், மெஹ்பூல் சல்மான், முகமது ரபி என 19 திரைப் பிரபலங்கள் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். 

 

 

ALSO READ | சோனியா அகர்வாலை கண்டு வியந்த படக்குழு!

 

fallbacks

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெயராஜ் கூறியதாவது.,

"முதலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அன்புடன் வெளியிட்டுள்ள திரையுலக பிரபலங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்களது அன்பு அளவிட முடியாதது. இது எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக உணர வைக்கிறது. இந்த நிகழ்வு படத்தைப் பலமடங்கு வெளிச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

படத்தின் ஆடியோ, டிரைலர் விரைவில் வெளியாக இருக்கின்றன. படத்தை உலக அளவில் திரையரங்குகளில் வெளியிடும் திட்டங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறோம்."என்றார்.

படத்தின் இயக்குநர் ஷிஜின்லால் எஸ்.எஸ் கூறியதாவது.,

" முதலில் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பட வாய்ப்பை அளித்த என் தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 19 பிரபலங்கள் தங்கள் அன்பையும் ஆதரவையும் காட்டும் வகையில், தங்களது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. இதை எங்களுக்குக் கிடைத்திருக்கும் பெரிய தொரு வெற்றியாக நான் உணர்கிறேன். இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயமாகப் புது அனுபவமாக இருக்கும் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.படத்தில் பணியாற்றிய நட்சத்திரங்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருமே தங்களது சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்கள்.ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு எங்களைப் பெரிதும் ஊக்கப்படுத்தி உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. " என்றார்.

கிராண்மா கதையிலும் காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட சோனியா அகர்வால், சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | விக்ரமில் கமலின் மகனாக நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More